கிரிக்கெட் செய்திகள்

இந்த பையனுக்கு அறிமுகம் தேவையில்லை ! அவரின் ஆட்டம் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் – பட்லர்

Root

முதல் ஐபிஎல் தொடரில் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் பிறகான சீசன்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கவில்லை. அதன் பின் அணி இந்திய இளம் வீரர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. ஆதனால் கடந்த சில வருடங்களாக அந்த அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த முறை இறுதிப் போட்டி வரை முன்னேறி கோப்பை வெல்லும் வாய்ப்பை குஜராத் அணியிடம் இழந்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறந்து விளங்கினாலும், மிடில் ஆர்டரில் ஹெட்மயர் தவிர மற்றவர்களால் சிறப்பாக விளையாடவில்லை . இதனால் இந்த முறை அணியில் ஜேசன் ஹோல்டர் எடுக்கப்பட்டார். இவர் அந்த மிடில் ஆர்டர் இடத்தை பேட்ஸ்மேன் ஆகவும் அதே நேரத்தில் பந்துவீச்சிலும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் அணியை சிறப்பாக கட்டமைத்துள்ளது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகிறார். ஜோ ரூட் கடந்த காலங்களில் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்தவர், ஆனால் அவரை எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. கடந்த டிசம்பரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ஐபிஎல் 2023 க்கான ஏலத்தில் ஒப்பந்தம் செய்தது.

நேற்று நடைபெற்ற வீரர்கள் அறிமுக விழாவில் ஜோ ரூட்டுக்கான ஜெர்ஸியை ஜோஸ் பட்லர் வழங்கினார் .

ஜோ ரூட் குறித்து பேசும்போது
“இந்த பையனுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை, இதுவரை ஜோ ஒரு அற்புதமாக விளையாடியதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நீங்கள் ஐபிஎல்-ல் ஒரு பகுதியாக இருப்பதில் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்கள், அதில் இருந்து நீங்கள் எவ்வளவு சந்தோசம் பெறுவீர்கள், அணிக்கு எவ்வளவு கொடுக்கப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினார்

மேலும் அவர் கூறும்போது “ஆனால், நிச்சயமாக, ஒரு அணியாக எங்களுக்கு, இங்கு உள்ள அனைவரும் உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளப் போகிறார்கள் மற்றும் அணிக்காக நீங்கள் கொடுக்கும் அனைத்தையும் ஏற்றுக்கொள்வோம். எனவே நல்ல அதிர்ஷ்டம், அனுபவத்தை அனுபவிக்கவும், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஐபிஎல் வழங்கும் அனைத்தையும் அனுபவிக்கவும். உங்களுக்கு ஒரு சிறந்த காலம் உள்ளது” என்று கூறினார் .

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top