இந்திய டாப்-ஆர்டர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முற்றிலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் இல்லாததால், மிடில் ஆர்டரும் ஒருவிதமான பலவீனத்தை வெளிக்காட்டியது.
இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வெற்றியைப் பெற்றதன் மூலம், இந்திய அணி இந்த ஆண்டை சிறப்பாக தொடங்கியது. இருப்பினும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று , ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சமீபத்தில் சொந்த மண்ணில் கோட்டைவிட்டது.
சூர்யகுமார் யாதவ், இதுவரை ஷார்ட்டர் ஃபார்மட்டில் மான்ஸ்டராக விளையாடினார்.ஆனால் மூன்று வகையான பார்மட்களிலும் இதை வெளிப்படுத்த தவறினார். இந்தத் தொடரில் சூர்யகுமார் யாதவ் அனைத்து போட்டிகளிலும் முதல் பந்தில் கோல்டன் டக் ஆகி ஆட்டமிழக்க, உலகக் கோப்பை ஆண்டில் இந்தியாவின் கவலையை அதிகப்படுத்தியது. குறிப்பாக சமூக ஊடகங்களில், அவரது தேர்வை அவதூறு பேசி மற்றும் சஞ்சு சாம்சனை மீண்டும் அணியில் சேர்க்க பிசிசிஐ யை பலரும் வலியுறுத்தி வருகின்றார்கள்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நிகில் சோப்ரா கூறும்போது “இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை அணியில் சூர்யகுமார் இடம் பெறுவார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது “கடந்த ஆண்டில் சூர்யகுமார் யாதவ் டி20களில் 180 ஸ்டிரைக் ரேட்டுடன் 1000 ரன்களுக்கு மேல் எடுத்ததுள்ளார், இதனால் அவர் உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவார் என்று நம்புகிறேன். அவர் ரன்களை எடுக்கத் தொடங்கினால் அதற்கு வானில் எல்லை இல்லை. அவர் சிறப்பாக செயல்படும் போது, உங்களுக்காக விளையாட்டுகளை வென்று தருவார். அவர் போட்டிகளில் வெற்றிபெறும் மனநிலையுடன் பேட் செய்கிறார், எனவே அவர் லெவனில் ஒரு பகுதியாக இருப்பார், மேலும் இந்திய அணி அவருடன் நிலைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார் .
சூர்யகுமார் யாதவின் உலகக்கோப்பை வாய்ப்பு குறித்து பேசும்போது “அவர் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறாரோ, அவ்வளவு அனுபவத்தைப் பெறுவார் மற்றும் அணிக்காக அதிக ஆட்டங்களில் வெற்றி பெறுவார். என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு கண்டுபிடிப்பு, நாம் அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும், அவருடன் தொடர்ந்து இருக்க வேண்டும் ”என்று அவர் மேலும் பேசினார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்து கூறும்போது “
உலகக்கோப்பை நெருங்கி வருவதால், ஐயர் மற்றும் பந்தின் மறுபிரவேசம் என்பது நிச்சயமற்றதாக இருக்கிறது. இதனால் நான்காவது இடத்தை நிரப்ப சூர்யகுமார் யாதவையே பலர் நம்பியிருக்கிறார்கள். சாம்சனும் வரவிருக்கும் ஐபிஎல்-இல் மிடில்-ஆர்டர் ஸ்லாட்டுக்கு முன்னோடி தேர்வாக வேண்டும் என்பதற்காக ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் ” என்று கூறினார் .