அகமதாபாத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி , முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அதை தொடர்ந்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவன் காண்வே மற்றும் ருதுராஜ் களமிறங்கினார்கள். சென்னை அணியின் ருத்ராஜை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடாததால் 200 ரன்களுக்கு மேல் எடுக்க வாய்ப்பிருந்தும் எடுக்க முடியாமல் போனது. இருபது ஓவர் முடில் சென்னை அணி 178 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் தங்களால் முடிந்த பங்களிப்பை கொடுக்க இறுதியில் வழக்கம் போல ரஷித் கான் பினிஷராக செயல்பட , இறுதி ஓவரில் பவுண்டரிகள் அடித்து முடித்து வைத்தார் ராகுல் திவேத்தியா.இதில் ரஷித் கானின் செயல்பாடு மிக முக்கியமாக இருந்தது.
ரஷித் கான் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகள் எடுத்ததை தொடர்ந்து அவரது திறமையை பேட்டிங்கிளும் வெளிப்படுத்தினார். 24 வயதான அவர் 4-0-26-2 என்று பந்துவீசி ,மூன்று பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார், இதனால் நடப்பு சாம்பியன் எதிரணியின் 178 ரன்களை எளிதில் கடக்க முடிந்தது .
இதுகுறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி கூறும்பொது “உண்மை என்னவென்றால், அவர் 10 அல்லது அதற்கும் குறைவான பந்துகளை எதிர்கொள்ளும்போது அவர் சிறந்தவராக இருக்கிறார். அப்போதுதான் அவர் எதிரணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். ஆனால் அவர் திடீரென 10வது ஓவரில் வந்தால், அது அவருக்கு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையாக இருக்கலாம், எனவே 17வது ஓவரில் இருந்து அவர் மிகவும் ஆபத்தானவர்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது ” லெக்-ஸ்பின்னர் தனது ஆட்டத்தை மாற்றி விளையாடுவதை எப்படி விரும்புகிறார் என்பதை எடுத்துக்காட்டினார்.
“ரஷீத் கான் போன்ற வீரர்கள் எப்போதுமே சிறந்த விளையாட்டில் ஈடுபடுவார்கள். அவர் ஆட்டத்தில் நுழைந்த முதல் கணம் பவர்பிளேயில் இருந்தது. ஆட்டம் அவர்களிடமிருந்து ஓடிக்கொண்டிருந்தது. அவர் ஒரு ஓவர் வீசினார், அவர் ஒரு விக்கெட்டை எடுத்தார். அதனால் மீண்டும், முக்கியமான நேரம், ஹாட்ஸ்பாட்டில் வைத்து, அவர் வேலையைச் செய்கிறார்” என்று கூறினார்.
நேற்றைய ஆட்டம் முடிந்த பின் ரஷித் கான் பேசும்போது “வந்த முதல் பந்தில் இருந்து வந்து அடிப்பது எனக்கு அணியில் உள்ள பங்கு. ஆனால், நேற்று நான் செய்த அடிக்கும் பயிற்சியைப் போல், வரவிருக்கும் ஆட்டத்தில் முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சிப்பேன். விளையாட்டை பினிசிங் செய்ய வேண்டும்” என்று பேசினார்.