கிரிக்கெட் செய்திகள்

ஹர்திக் பாண்டியா கேப்டன்சிக்கு உதவி செய்ய இந்த ஆஸ்திரேலியா வீரர் தேவை – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆச்சரிய கருத்து!

Smith

நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது ஐபிஎல் 2023 தொடரை மார்ச் 31 ஆம் தேதி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை துவங்கி உள்ளது. போட்டியின் முதல் இன்னிங்ஸில் பில்டிங் செய்து கொண்டிருந்த குஜராத் அணியின் வீரர் கேன் வில்லியம்சன் பௌண்டரி லைன் அருகில் பந்தைப் பிடிக்கப் போய் தவறி விழுந்தார்.

இதனால், கேன் வில்லியம்சன் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக முழு போட்டியிலிருந்தும் வெளியேறினார். இவருக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயர் விதியில், சாய் சுதர்சன் வந்து விளையாடி அவரின் பங்களிப்பை வழங்கினார்.வில்லியம்சன் சமீபத்தில் நடந்து முடிந்த ஏலத்தில் இவர் குஜராத் அணியால் எடுக்கப்பட்டார் . இந்தக் காயத்தின் தன்மை மிகவும் மோசமாக உள்ளதால் இந்த தொடரில் இருந்து விலகி உடனே நாடு திரும்பினார்.இதனால் இவருக்கு பதிலாக மாற்று வீரரை தேடும் பணியில் அணி நிர்வாகம் தீவிரமாக இறங்கி உள்ளது.

இது குறித்து முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவிக்கையில், நியூசிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேனுக்கு மாற்றாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சிறந்தவராக இருப்பார் என கூறியுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்தின் தற்போதைய பேட்டிங் பார்ம் பற்றி கவலை இருந்தாலும், அவருடைய தலைமைப் பணியில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான தொடரில் சிறந்து விளங்கினார். பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்தது மூன்றாவது போட்டிக்கு முன் அணியின் கேப்டன் கம்மிங்ஸ் நாடு திரும்ப,மூன்றாவது போட்டியில் கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டார் இதனைத் தொடர்ந்து நடைபெற்ற,தொடரின் இறுதி இரண்டு டெஸ்டுகளில் ஒரு வெற்றி மற்றும் டிராவை பெற்று அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா வெல்வதற்கு இவரின் பங்கு முக்கியமாக இருந்தது. இதனால் இவரை அணியில் சேர்ப்பது ஹர்திக் பாண்டியாவிற்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். கேப்டனாக அவரது புத்திசாலித்தனமான தன்மை மற்றும் அவரது கிரிக்கெட் புத்திசாலித்தனம் அணிக்கு உதவும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து மஞ்ச்ரேக்கர் கூறுகையில் “புதிய விதிகளுடன், நான் ஸ்மித்தின் கேப்டன்சியைப் பார்க்க விரும்புகிறேன், நாங்கள் இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் பார்த்தோம். அதைப் பற்றி நாங்கள் ஆர்வமாக இருந்தோம்.ஹர்திக் பாண்டியாவுக்கு கொஞ்சம் உதவி தேவை, அவர் ஒப்புக்கொண்டார், எனது தந்திரங்கள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, எனவே நான் அதை மற்றவர்களிடம் விட்டுவிடப் போகிறேன். எனவே, அது ஒரு சிறந்த அழைப்பாக இருக்கலாம்” என்று கூறினார்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top