நான்கு வருடங்களுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது.
நேற்றைய லக்னவனுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கடந்த போட்டி போல, இந்த முறையும் அரைசதம் அடிக்க ,அதனை தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்களும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்க சென்னை அணி 217 ரன்கள் எடுத்தது. இதனை துரத்தி விளையாடிய லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற மொயின் அலி சென்னை அணி கேப்டனை பாராட்டி உள்ளார். கீப்பர்-பேட்டர் ஒரு தலைசிறந்த தந்திரோபாயவாதி என்றும், எந்தப் பந்து வீச்சாளர்களுக்கு எப்போது பந்து வீச வேண்டும் என்பது அவருக்குத் தெரியும் என்றும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஒப்புக்கொண்டார்.
லக்ன அணியில் கைல் மேயர்ஸ் 218 ரன்களை இலக்காகக் கொண்டு பேட்டிங்கை தொடங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை துவம்சம் செய்ததால், சூப்பர் கிங்ஸ் நெருக்கடியில் சிக்கியது. ரசிகர்கள் அனைவரும் ஐந்து ஓவர்களில் 73 ரன்கள் எடுத்த நிலையில் இன்றைய போட்டியில் தோல்வி நிச்சயம் உறுதி எப்போது தோற்க போகிறோம் என்பதிலே உள்ளது, என்று நினைக்க அந்த நேரத்தில் அணியின் கேப்டன் தோனி சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு வந்து, எதிரணியை போட்டியை விட்டு விட்டு வெளியேறினார்.
மொயின் அலி நேற்றைய போட்டியில் நான்கு ஓர்கள் வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
எம.எஸ் தோனி பற்றி மொயின் அலி கூறும் போது
“நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீசுவது போல் பந்துவீச முயற்சித்தேன், என்னால் முடிந்தவரை கடினமாக சுழற்றினேன். அவர்களிடம் பெரிய ஹிட்டர்கள் இருந்தனர், எனவே இந்த வீரர்களுக்கு எதிராக நீங்கள் அதைப் பெற விரும்பவில்லை, ஆனால் எங்களிடம் நல்ல பந்துவீச்சு பார்ட்னர்ஷிப் இருந்தது, அது நன்றாக இருந்தது. வெற்றி பெற, அவர் என்ன செய்கிறார் என்பதை கேப்டன் தோனி அறிவார். தோனியின் கீழ் பந்துவீசுவதில் உள்ள பெரிய விஷயம், வீரர்களை எப்போது பந்துவீச வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். நான் ஜடேஜாவுடன் எல்லா நேரத்திலும் பந்து வீசப் போவதில்லை. அது பார்ட்னர்ஷிப் மற்றும் தனிநபர்களை எடுக்கும் முடிவு என்று நினைக்கிறேன் , தொடர்ந்து போட்டிகளை வெல்வதற்கு உதவும்” என்று கூறினார்.