கிரிக்கெட் செய்திகள்

இன்றைய போட்டியில் ராகுலின் பேட் சத்தமாக பேசும் – முன்னாள் இந்திய பயிற்சியாளர் கணிப்பு!

Kl

இந்திய அணியின் முன்னாள் துணை கேப்டன் ராகுல் திங்கட்கிழமை நடைபெறும் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாட பெங்களூரு திரும்புகிறார்.

பெங்களூரில் நான்கு சீசன்களுக்கு பிறகு முதன்முறையாக எம்.சின்னசாமி ஸ்டேடியத்திற்கு லக்னா சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டனாக ராகுல் திரும்புகிறார். இதனால் எதிரணி வீரராக தனது முதல் வெற்றியைப் பெங்களூர் மைதானத்தில் பதிவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த போட்டியில் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான வெற்றியைப் பதிவு செய்த பிறகு பெங்களூரை சந்திக்கிறார்.

பெங்களூர் அணி பொறுத்த வரையில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எளிதில் வீழ்த்தியிருந்தாலும்,அடுத்த போட்டியில் கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்த பின்னர் இந்த போட்டிக்கு பெங்களூர் அணி தயாராகி வருகிறது.

லக்னோ அணி தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் அணிக்கு திரும்பினாலும் , பெங்களூருக்கு எதிராக கேப்டன் ராகுல் மற்றும் இன்-ஃபார்ம் கைல் மேயர்ஸ் இன்னிங்ஸைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரர் மேயர்ஸ் தனது முந்தைய ஆட்டத்தில் மட்டும் சிறப்பாக விளையாட தவறினார். அதே நேரத்தில் ராகுல் 31 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து சொந்த மைதானத்தில் லக்னோ வெற்றி பெற உதவினார்.

கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து பெங்களூரை சொந்த மைதானமாக கொண்டு விளையாடிய ராகுல் மீண்டும் பெங்களூரு மைதானத்தில் விளையாடுவது குறித்து முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும் போது “அவர் ஒரு பெரிய இன்னிங்ஸை விளையாடுவதை இலக்காகக் கொண்டுள்ளார். ஆனால் விரைவான அணுகுமுறையுடன் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். கைல் மேயர்ஸ், ஸ்டோனிஸ், பதோனி என லக்னோ அணி ஒரு சக்திவாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. எனவே ராகுல் ஆரம்பத்தில் பெரிய ஷாட்டுகளுக்கு வாய்ப்பு எடுப்பார் என நம்பலாம்” என்று கூறினார்.

மேலும் அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் மேயர்ஸ் மீது பாராட்டு மழை பொழிந்தார், அவர் லக்னோபேட்டிங் வரிசையில் கைவிட முடியாதவராக மாறினார். “அவர் பேட்டிங் செய்வதை நான் பார்த்து ரசித்தேன். அவர் ஒரு அபயகரமான வீரர், அவர் நல்ல பேட்டிங் நிலைமையைப் பெற்றால், அவர் 5-6 ஓவர்களில் ஆட்டத்தை அவர் விளையாடும் அணிக்கு சாதகமாக அமைக்க முடியும். அவரால், அணிக்கு ஒரு பெரிய அடித்தளத்தை உருவாக்க முடியும்” சாஸ்திரி மேலும் கூறினார்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top