கிரிக்கெட் செய்திகள்

Non-ஸ்ட்ரைக்கர் கிரீஸுக்கு வெளியே இருந்த போதிலும், ஏன் அவுட் ஆகவில்லை? – என்ன சொல்கிறது விதிமுறைகள்!

Rcb

நேற்று இரவு பெங்களூரு எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டியில் கடைசி பந்தில் லக்னா அணி திரில் வெற்றி பெற்றது.

போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணியின் ஓபனர்கள் விராட் கோலி மற்றும் பாப் டூ பிளசிஸ் போட்டியின் தொடக்க ஓவர்களை சிறப்பாக கையாண்டு அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார்கள். அடுத்ததாக வந்த மேக்ஸ்வெல்லும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 212 ரன்கள் குவித்தது.

அதனை துரத்தி விளையாடிய லக்னோ அணி ஒரு கட்டத்தில் 30 ரன்களுக்கு மூன்று விக்கெடுகளை இழந்து திணறியது. அடுத்து வந்த ஸ்டோனிஸ் மற்றும் நிக்லஸ் பூரான் சிறப்பாக விளையாட அணி வெற்றிய நெருங்கியது.

முக்கியமான கட்டத்தில் நிக்கோலஸ் புரான் அவுட் ஆகி வெளியேற ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது இதனால் கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்று சூழ்நிலையில் ஹர்சல் பட்டேல் அந்த ஓவரை வீசினார்.

முதல் பந்தில் உனட்கட் ஒரு சிங்கிள் எடுக்க இரண்டாவது பந்தில் மார்க் உட் அவுட் ஆக அடுத்து வந்த ரவி பிஸ்னாய் தான் சந்தித்த முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க, லக்னோ அணி ஒரு ரன் எடுத்தால் ட்ரா மற்றும் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வாய்ப்பு உருவானது.

இதற்கு அடுத்த பந்தில் ரவி பிஸ்னாய் ஒரு ரன் எடுக்க ஆட்டம் சமனிற்கு வந்தது. ஐந்தாவது பந்தில் உனட்கட்டை அவுட்டாக்க கடைசி ஒரு பந்தில் எடுத்தால் வெற்றி என்று நிலையில் கடைசி பந்தை வீசும் முன் பந்துவீச்சாளர் மன்கட்டிங் முறையில் ரன் அவுட் செய்ய முயற்சித்த போது பந்து ஸ்டெம்பில் படவில்லை. இதனால் இந்த ஆபத்திலிருந்து தப்பிய லக்னோ கடைசி பந்தில் ஒரு ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சூழ்நிலையில் ஆவேஷ் கான் களமிறங்கினார். கடைசி பந்தை பந்துவீச்சாளர் வீச அந்த வந்து நேராக விக்கெட் கீப்பரிடம் சென்றது. அந்த பந்தை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தவற விட அந்த இடைப்பட்ட நேரத்தில் தங்களுக்கு தேவையான அந்த ஒரு ரன்னை ஓடி எடுத்து விட்டார்கள். அதனால் லக்னோ அணி கடைசி பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி பந்தில் நடைபெற்ற ட்ராமா காரணமாக தோல்வியடைந்த பெங்களூர் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மனமுடைந்து போனார்கள்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஹர்சல் பட்டேல் ரன் அவுட் செய்ய முற்பட்டபோது முதல் முறையில் பந்தை ஸ்டெம்பில் தொடாமல், கொஞ்ச தூரம் சென்ற பின் திரும்பவும் ஸ்டெம்பை நோக்கி எரிந்த போது பந்து ஸ்டெம்பில் பட்டது. ஆனால் நடுவர் நாட் அவுட் என்று சொன்னார் இதற்கு என்ன காரணம் என்று பார்க்கையில் MCCயின் 38.3.1.2 சட்ட விதிப்படி , பந்து வீச்சாளர் அந்த நிலையை அடைந்தவுடன், பந்து வீச்சாளர் சாதாரணமாக பந்தை விடுவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் தருணத்திற்கு முன்பே, ஸ்ட்ரைக்கர் அல்லாதவர் தனது கீரீசை விட்டு வெளியேறியிருந்தாலும்,பந்து வீச்சாளர் நான்-ஸ்ட்ரைக்கரை ரன் அவுட் செய்வது இனி சாத்தியமில்லை.’

இந்த நிலையில், பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் தனது வந்து வீசுவதற்கான முயற்சியை முடித்துவிட்டதால், அந்த நேரத்தில் அவர் என்ன செய்தாலும், அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஹர்ஷல் பட்டேல் தனது முதல் முயற்சியில் அவுட் செய்திருக்க வேண்டும். இதை சரியாக செய்ய தவறியதால் பெங்களூரு அணி வெற்றி வெற்றி வாய்ப்பை இழந்தது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top