நேற்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று இந்த ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆனால் இந்த போட்டியில் உலகின் தலைசிறந்த டி20 வீரரான சூரியகுமார் யாதவ் மீண்டும் ஒருமுறை கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் பலரும் அவர் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும்,தற்போதைய டெல்லி அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் அவரது ஃபார்ம் குறித்து பேசி உள்ளார்.
2022 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் என்ற விருது வென்ற, சூர்யகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து உயரங்களையும் எட்டினார்.இரண்டு டி20 சதங்கள் மற்றும் அந்த பார்மட்டில் அந்த ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஆவார். தொடர்ந்து அவரது டி20 போட்டியில் ஃபார்ம் உயர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் அடுத்த ஆறு மாத கால இடைவெளியில் கிரிக்கெட் வாழ்க்கை அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது. கிரிக்கெட்டில் அடிக்கடி நடப்பது போல், உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்ற ஒரு சம்பவம் போதும் என்று நினைக்க ஆனால்,நேற்று மாலை டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் போட்டி வர கூட சூரியகுமார் யாதவுக்கு சாதகமாக எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
கடந்த மாதம், சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார் , மிட்செல் ஸ்டார்க் அவரை இரண்டு முறையும் ஆடம் ஜாம்பா ஒரு முறையும் வீழ்த்தி இருந்தார்கள் . ஐபிஎல் தொடங்கினால், சூரியகுமார் யாதவ் அவர் மிகவும் விரும்பும் வடிவத்திற்குத் திரும்பினால், அது அவரது சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று பலர் நம்பினர், ஆனால் அவரால் விளையாடிய மூன்று இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக விளையாட முடியவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக 15 மற்றும் 1 ரன்கள் எடுத்த நிலையில், டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக தனது டிரேட்மார்க் ஸ்கூப் ஷாட்டை விளையாட முயன்றபோது மற்றொரு முறை முதல் பந்தில் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
சூரியகுமார் யாதவின் ஃபார்ம் குறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ” இந்த போட்டியில் சூரியகுமார் யாதவின் முயற்சி நல்ல முயற்சி தான் ஆனால் பிரச்சனை என்னவென்றால், சூரியகுமார் யாதவ் அதை ஃபீல்டருக்கு நேராக ஃபைன் லெக்கில் அடித்தார்.
சூர்யாவின் ஃபார்ம் ஒரு போதும் கவலை இல்லை,நீங்கள் நான்கு பவுண்டரிகள் அடித்து மீண்டும் ஃபார்மிற்கு வந்தீர்கள். நீங்கள் முதல் பந்திலேயே அவுட் ஆனீர்கள், அதுதான் இன்றைய நிலைமை. அந்த ஷாட் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸராக இருந்திருக்கலாம் அவ்வாறு நடக்காமல் போய்விட்டது. சூர்யா எந்த வகையான பேட்டராக இருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்தது அதனால் அவர் தற்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் அவருக்கு தேவையோ 10 பந்துகள் மட்டுமே; அவர் மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்புவார்” என்று அவர் கூறினார்.