பரபரப்பாக தற்போது சென்னையில் நடந்து முடிந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியின் மோதிய போட்டியில் ராஜஸ்தான் அணி மூன்று ரன்கள் வெற்றி பெற்றது. சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி,அணியின் வெற்றிக்காக கடைசிவரை போராடியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த முடிவு அனைவரிடமும் ஒரு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் பொதுவாக சென்னை மைதானத்தில் சேஸிங் செய்யும் அணி குறைந்த வெற்றி சதவீதத்தை கொண்டுள்ளது.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பட்லர் அரைசதம் அடித்தார். ராஜஸ்தான் அணி ஆடுரவுண்டர் அஸ்வின் 30 ரன்கள் எடுத்து அணிக்கு சரியான பங்களிப்பை வழங்கினார். அஸ்வின் தான் சந்தித்த முதல் பந்திலயே கொடுத்த கேட்ச் வாய்ப்பை சென்னை அணியின் மொயின் அலி தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த விளையாடிய சென்னை அணிக்கு ஓபனர் ருதுராஜ் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். மற்றொரு ஓப்பனர் கான்வே அரைசதம் அடித்தார். சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்த ஆட்டத்தில் சொதப்பியதை அடுத்து ஆட்டம் இறுதி கட்டத்தில் பரபரப்பு எட்டியது.
கடைசி நான்கு ஓவர்களுக்கு 59 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கேப்டன் டோனி மற்றும் ஜடேஜா விளையாடி கொண்டு இருந்தார்கள். 17 வது ஓவர் வீசிய சாகல் ஐந்து ரன்கள் மட்டும் கொடுத்து அந்த ஓரை கட்டுப்படுத்தினார். பதினெட்டாவது ஓவரில் கேப்டன் டோனி ஒரு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி எடுத்து ரசிகர்களை குஷி படுத்தினார்.
கடைசி இரண்டு ஓவர்களுக்கு 40 ரன்கள் எடுத்தால் வெற்றி அந்த நிலை ஏற்பட ஜடேஜா நடித்த இரண்டு சிக்ஸர்கள் மூலம் அந்த ஓவரில் 19 கிடைத்தது. இதனால் கடைசி அவர்கள் 21 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை உருவானது. கடைசி ஓவரை ராஜஸ்தான் அணியின் சந்தீப் சர்மா வீச கேப்டன் டோனி எதிர்கொண்டார். முதல் பந்தை போடுவதற்கு முன்னே இரண்டு வைடுகள் போட்டு தனது பதட்டத்தை வெளிக்காட்டினார் பந்துவீச்சாளர்.
கடைசி ஓவரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளை தோனி சிக்ஸர் அனுப்ப கடைசி மூன்று பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இதனால் ஆணி கட்டாயம் வெற்றி பெறும் என் நம்பிக்கையில் சென்னை அணி ரசிகர்கள் அடுத்த மூன்று பந்துகளை எதிர் நோக்கும் போது சந்திப் சர்மா அந்த மூன்று பந்துகளையும் சிறப்பாக வீசி ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.
ஆட்டம் முடிந்த பிறகு இதற்கு முன்னதாக கேப்டன் தோனி சொன்ன வார்த்தைகளை நினைவுக்கு வருகிறது “உங்களின் வேலையை நீங்கள் சிறப்பாக பாருங்கள். அந்த முடிவு உங்களுக்கு சாதகமானதாகவும் அமையலாம். பாதகமானதாகவும் அமையலாம் அதை நினைத்து வருந்தாதீர்கள்”.