கிரிக்கெட் செய்திகள்

கொல்கத்தாவின் பந்துவீச்சை சிதறடித்து இந்த ஐபிஎல் இல் முதல் சதத்தை பதிவு செய்தார் ஹைதராபாத் அணியின் இளம் வீரர்

Srh

கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடும் போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி சில மாற்றங்களுடன் களமிறங்கியது. ஆனால் கொல்கத்தா அணி கடந்த போட்டியில் விளையாடிய லெவனை மாற்றாமல் அதே லெவனுடன் விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி இரண்டாவது பேட்டிங் போது பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் அதனால் சாதகம் என்று கருதி ஹைதராபாத் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இதனை அடுத்து அணியின் ஓபனர்களாக இந்த முறை இங்கிலாந்தனியின் அதிரடி வீரர் புரூக் மற்றும் மயாங்க் அகர்வால் இறங்கினார்கள். மயாங்க் அகர்வால் வந்த வேகத்தில் திரும்ப, முந்தைய போட்டிகளில் சொதப்பிய புரூக் இந்த முறை சிறப்பாக இன்னிங்சை தொடங்கினார்.முந்தைய போட்டிகளில் முதல்,இரண்டாவது விக்கெடுகளுக்கு அடுத்து இறங்கிய புரூக் இந்த முறை ஓப்பனராக இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மைதானங்கள் பொதுவாக சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், இடைப்பட்ட ஓவர்களில் இவரால் சிறப்பாக செயல்பட செயல்பட முடியவில்லை என்ற விமர்சனம் வரும் போது வைக்கப்பட்டது. அதனால் இந்த முறை அணி நிர்வாகத்தால் பிரமோஷன் செய்யப்பட்டு ஓபனாராக களமிறங்கினார்.

களம் இறங்கியதில் இருந்த தனது அதிரடி பாணியை வெளிப்படுத்தி அணியின் ரன் கணக்கை வேகமாக உயர்த்தினார். இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்துக்காக தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவரின் ஷாட் செலக்சன்கள் அனைத்தும் இந்த முறை சிறப்பாக இருந்தது. இந்த முறை இவர் வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக கையாளுவார் என்ற நம்பிக்கையில் ஓப்பனாக இறக்கப்பட்டதற்கு, இந்த முடிவு தான் எனக்கு தேவை என்று நிரூபித்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நான் சந்தித்த 55வது பந்தில் இந்த ஐபிஎல் தொடருக்கான முதல் சதத்தை பதிவு செய்தார்.

இதன்மூலம் தன்னுடைய பேட்டிங் திறமையை இந்த ஐபிஎல் தொடரில் வெளிக்காட்ட தொடங்கியுள்ளார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 228 ரன்கள் குவித்தது.

கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் ரசல் மூன்று விக்கெட்டுகளையும், சுழற் பந்துவீச்சாளர் வரும் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

இந்த ஆட்டத்தின் மூலம் தான் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தையும் புரூக் சுக்குநூறாக ஆக உடைத்து எரிந்துள்ளார்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top