கிரிக்கெட் செய்திகள்

இந்த வீரருக்கு எப்போது இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் – முன்னாள் மேற்கிந்திய தீவுகள் வீரர் பிஷப் பேட்டி!

Rinku

ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 228 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஓபனராக இறங்கிய புரூக் இந்த தொடரில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

229 ரன்கள் இலக்காக கொண்டு விளையாடிய கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள், வருவதும் போவதுமாக இருந்தார்கள். கொல்கத்தா அணியில் ஜெகதீசன், நிதிஷ் ரானா மற்றும் ரிங்கு சிங், இந்த மூவர்கள் மட்டுமே 30 ரன்களை கடந்திருந்தனர். ஹைதராபாத் அணியினர் சிறப்பாக பந்துவீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தார்கள்.

குஜராத்து அணிக்கு எதிரான கடந்த போட்டியில் கடைசி ஓவரில் 30 ரன்கள் அடித்து வெற்றி பெற செய்த ரிங்கு சிங் இந்த முறையும் அவ்வாறு செய்வார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவரும் முடிந்த அளவுக்கு போராடி அணிக்கான ரன்களை சேர்த்தார் இறுதியில் கொல்கத்தா அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் தற்போது ரிங் சிங்குவின் பேட்டிங் பற்றி அனைவரும் பேச தொடங்கிவிட்டார்கள்.

அவரின் பேட்டிங் பற்றி முன்னாள் மேற்கிந்திய தீவுகள் வீரர் பிஷப் கூறும் போது “அவருக்கு எப்போது அணியில் உயர்வு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். கடந்த சீசனில் நான் அவரைப் பார்த்தேன், நாங்கள் பார்த்த எண்களைத் தவிர அவரைப் பற்றி இந்த முறை ஏதோ புதிதாக இருக்கிறது. நீங்கள் அவருடைய முதல் தர போட்டிகளின் ரன் விகிதங்களை பாருங்கள். அதனால் அவருக்கு விரைவில் இந்தியா ஏ அழைப்பு வரும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

இதற்கிடையில், டாம் மூடி ரிங்கு சிங் பற்றி கூறும்போது “அவரை எந்த வடிவத்தில் பொருத்தமாக இந்தியா பார்க்கிறது என்பதை நான் நினைக்கிறேன். அது என்ன, 20 ஓவர் கிரிக்கெட், 50 ஓவர் அல்லது டெஸ்ட் கிரிக்கெட் என எதுவாக இருந்தாலும், இந்தியாவின் ஒயிட்-பால் கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக ரிங்கு இருக்க முடியும். எனவே அவருக்கான வாய்ப்பு இந்திய அணியில் விரைவில் வரும், முதல் தர கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை கொடுத்து வருவதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார்

இவர் உத்திரபிரதேச அணிக்காக 40 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 2875 ரன்கள் எடுத்துள்ளார். இதனை அவர் 59.89 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top