கிரிக்கெட் செய்திகள்

உங்கள் அணியில் யார் வலிமையானவர் என்பது முக்கியம் அல்ல, அணியின் வெற்றியே இங்கு முக்கியமானது – டெல்லி அணி குறித்து விரேந்தர் சேவாக் பேச்சு

Delhi

ஐபிஎல் தொடரில் கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் பட்டாளத்தை கொண்டு சிறப்பாக விளையாடும் டெல்லி அணி இந்த தொடரில் இதுவரை தங்களது வெற்றி கணக்கை துவங்கவில்லை. அணியின் ரெகுலர் கேப்டன் ரிசப் பந்த் வாகன விபத்தின் காரணமாக இந்த சீசனில் இல்லாதது ஒரு காரணமாக இருந்தாலும் அணிக்கு தேவையான சரியான காம்பினேஷன் என்னும் அமையவில்லை என்பதை தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது.

டெல்லி அணியின் நிர்வாகத்தை பொறுத்தவரையில் அணியின் பயிற்சியாளராக உலகக்கோப்பை வென்ற முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் ஆலோசகராக ஆக முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியும் உள்ளார்கள். இருந்தும் டெல்லி அணி இதுவரை சிறப்பான ஆட்டத்தைவெளிப்படுத்தவில்லை

டெல்லி அணியின் பேட்டிங் எடுத்துக் கொண்டால் டேவிட் வார்னர், பிரித்திவி ஷா, மிட்சல் மார்ஸ், ரோமன் பாவல், யாஸ் தூள் லலித் யாதவ் அக்ஸர் பட்டேல் என பலமாக தெரிந்தாலும், இதுவரை இவர்கள் அனைவரும் ஒரு சேர சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அணியின் பௌலிங்கம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் நோர்க்கியா மற்றும் முஸ்தபிஷுரை நம்பியே அந்த அணி உள்ளது. டெல்லியணியின் மூத்த சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இன்னும் இந்த சீசனில் சரிவர செயல்பட ஆரம்பிக்கவில்லை.

டெல்லிங் அணியின் ஆட்டம் குறித்து முன்னாள் டெல்லி அணி வீரர் விரேந்தர் சேவாக் கூறும்போது “
“உங்களுடன் நேர்மையாக இருக்க, அங்கு இருக்கும் ஊழியர்களின் மதிப்பு பூஜ்ஜியமாகும். உங்கள் அணியில் யார் வலிமையானவர்கள் என்பது முக்கியமில்லை, அங்கு மோசமாக செயல்படுவது வீரர்கள்தான். டிரஸ்ஸிங் ரூமில் நீங்கள் விரும்பும் அளவுக்கு சிறந்த மனதைக் கொண்டிருக்கலாம், உங்கள் வீரர்கள் ரன்களை எடுக்கவில்லை அல்லது விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால், அவர்கள் என்ன செய்வார்கள்? என்ற கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறும் போது “நான் அதை ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டேன். உங்கள் போட்டிகளில் வெற்றிபெறக்கூடிய வீரர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும், ஒவ்வொரு முறையும் அவர்களை இயக்க வேண்டியதில்லை. அந்த வீரர்கள் இருந்தால், நீங்கள் சாம்பியன் ஆக முடியும். டெல்லியில் அந்த வீரர்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் ரன்களை எடுக்கவில்லை அல்லது விக்கெட்டுகளை எடுக்கவில்லை. நீங்கள் உத்திகளை உருவாக்கலாம், இறுதியில், மைதானத்திற்குள் நுழைபவர்கள் செயல்பட வேண்டும் ”என்று மேலும் கூறினார்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top