சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதியப்போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி சென்னை அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது
இத்தனைத் தொடர்ந்து சென்னை அணியின் ஓபனர்களாக ருத்ராஜ் மற்றும் மற்றும் டேவான் கான்வே களம் இறங்கினார்கள். ருத்ராஜ் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்ப கான்வே ஆட்டத்தை கையில் எடுத்தார். அவருக்கு துணையாக ரகானேவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ரன் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.
ரகானே 20 பந்துகளுக்கு 37 ரன்கள் எடுத்து ஹசரங்காவிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து வந்த சிவம் டுபேவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த ரன் எண்ணிக்கையில் எந்த தடையும் இல்லாமல் சீராக உயர்ந்து கொண்டே வந்தது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கான்வே, அரை சதம் அடித்து 83 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த ஆட்டத்தில் நூறு மீட்டர்களுக்கு மேல் இரண்டு சிக்சர் அடித்து,சிறப்பாக ஆடிய சிவம் டுபே 52 ரன்கள் அடித்து சிராஜிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற்றினார். கடைசி கட்ட ஓவர்களில் பெங்களூர் அணி ஓரளவுக்கு சிறப்பாக பந்து வீச சென்னை அணியால் எதிர்பார்த்த அன்னை எட்ட முடியவில்லை என்றே சொல்லலாம். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 226 ரன்கள் குவித்து தனது இன்னிங்ஸை முடித்தது.
227 ரன்களை துரத்தி இன்னிங்சை தொடங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அணியின் ஓப்பனரான விராட் கோலி ஆறு ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறியும் அதிர்ச்சி எடுத்தார். அவரை தொடர்ந்து வந்த மஹிப்பாலும் டக் அவுட் ஆகி வெளியேற, மேக்ஸ்வெல்லும் கேப்டன் டு பிளசிஸும் ஆட்டத்தை கையில் எடுத்தார்கள். இருவரும் சென்னை அணி பந்துவீச்சாளர்களுக்கு மைதானத்தை சுற்றிக் காண்பிப்பது போல் பந்து வீச்சாளர்கள் அனைவரையும் அடித்து நொறுக்கினார்கள்.
எட்டு ஓவர்களில் நூறு ரண்களைக் கடந்த பெங்களூர் அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என அனைவரும் நினைக்க, 76 ரன்கள் எடுத்திருந்த மேக்ஸ்வெல் தீக்ஷனா பந்து வீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற ஆட்டத்தில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இதற்கு அடுத்ததாக மொயின் அலி வீசிய ஓவரில் டு ப்ளஸூயும் தோனியிடம் கேடச் கொடுத்து வெளியேற மெதுவாக ஆட்டம் சென்னை அணி பக்கம் திரும்பியது.
கடைசி நான்கு ஓவர்களுக்கு 46 ரன்கள் எடுத்தால் பெங்களூர் அணி வெற்றி பெறலாம் என்ற வாய்ப்பு இருந்தது அப்போது களத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் சபாஷ் அகமது விளையாடிக் கொண்டிருந்தார்கள். 17 வது ஓவர் வீசிய தேஷ் பாண்டேவிடம் தினேஷ் கார்த்திக் ஆட்டம் இழந்து வெளியேற இம்பேக்ட் சப்ஸ்டியுட் ஆக பிரபு தேசாய் களத்திற்கு உள்ளே வந்தார்.
12 பந்துகளுக்கு 31 ரன்கள் என்ற நிலை இருக்கும் பொழுது தேஷ்பாண்டே பந்துவீச்சில் பர்னல் ஆட்டம் இழந்து வெளியேறினார். அந்த ஓவரில் 12 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்ததால் கடைசி ஆறு பந்துகளுக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. கடைசி ஓவரை இளம் வேகப்பந்துவீச்சாளர் மதிஷா பத்திரணா வீச பிரபு தேசாய் எதிர் கொண்டார். அந்த ஓவரில் மூன்றாவது பதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஸ்கூப் ஷாட் மூலம் 6 ரன்கள் அடித்து ரசிகர்களை குஷி படுத்தினார் பிரபுதேசாய். இதனால் கடைசி மூன்று பந்துகளுக்கு 11 ரன்கள் என்ற இலக்கு வந்தது.
கடைசி ஓவரின் நான்காவது பந்தை கிளீன் யார்க்கராக வீச அதை மட்டை வீச்சாளரால் அடிக்க முடியாமல் போனது. கடைசி இரண்டு பந்துகளுக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலை உருவாக ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் சென்னை ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். கடைசி பந்தில் பிரபு தேசாய் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதனால் பெங்களூர் அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஆறு புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
இந்த போட்டியில் கடைசி நான்கு ஓவர்களும் அனுபவம் இல்லாத இளம் வீரர்களை கொண்டு சிறப்பாக கையாண்ட சென்னை அணிக்கு இந்த வெற்றியின் மேல் முழு உரிமையும் உள்ளது. சென்னை அணியின் பீல்டிங் இந்த போட்டியில் மிகவும் மோசமாக இருந்தது. இதனை சரி செய்யும் பட்சத்தில் வரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என நம்பலாம்.