இந்திய அணிக்காக முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை 1983 ஆம் ஆண்டு வாங்கித் தந்த கபில்தேவ் சமீப காலங்களில் சில விஷயங்களில் மிகவும் சர்ச்சையான முறையில் பேசுவது வழக்கமாக இருக்கிறது. அதே சமயத்தில் தீவிரமாக சில விஷயங்களை உடைத்து பேசவும் ஆரம்பித்திருக்கிறார்!
சில மாதங்களுக்கு முன்பாக விளையாட்டில் ஸ்ட்ரெஸ் என்பது, நாம் விரும்பி விளையாடுகின்ற பொழுது கிடையாது. அது ஒரு ஆங்கில வார்த்தை. அதைப் பிடித்துக் கொண்டு இப்பொழுது எல்லோரும் அதை சொல்லத் தொடங்கி விட்டார்கள் என்று கூறியிருந்தார்.
இந்திய கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் பஞ்சத்தை பற்றி இப்பொழுது பேசும்பொழுது எங்களுடைய காலத்தில் கிரிக்கெட் மட்டுமே இருந்தது இப்பொழுது வீரர்கள் விளம்பரத்திலும் சேர்த்து வேலை செய்ய வேண்டியதாக இருப்பதால் கிரிக்கெட் கடினம் ஆகிவிட்டது என்பதாக பேசியிருக்கிறார்.
அவருடைய இந்தப் பேச்சில் இன்று, தற்பொழுது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா பல இடங்களில் நேரடியாகவே தாக்கி பேசியிருக்கிறார். மேலும் ஹர்திக் பாண்டியாவின் உடல் தகுதி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக அவருக்கு ஆதரவாக ரவி சாஸ்திரி பேசியிருந்தார். அதையும் கபில்தேவ் எதிர்த்து பேசி இருக்கிறார்.
இதுபற்றி கபில் தேவ் “நான் ரவி சாஸ்திரியின் கூற்றை மதிக்கிறேன். ஆனால் என்னால் அதை ஏற்க முடியாது ஏனென்றால், கிரிக்கெட் உலகில் டென்னிஸ் லில்லி போல காயத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டு திரும்பி வந்தவர்கள் யாரும் கிடையாது. மனித உடல் எந்த நிலையில் இருந்து வேண்டுமானாலும், மீண்டும் திரும்பி மேல் நிலைக்கு வர முடியும்.
ஹர்திக் பாண்டியா திறமையான வீரர். அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பி கடினமாக உழைத்தால் அவராலும் திரும்பி வர முடியும். பெரிய அளவில் உடல் எடை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளர் கார்ன்வெல் உடல் ஏன் பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் அவர் இதில் கடினமாக உழைத்தால் அவராலும் மீண்டு வர முடியும்.
இப்பொழுது உங்களிடம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மட்டும் இல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டி கிரிக்கெட் உள்ளன. இத்தோடு சேர்த்து உங்களுக்கு விளம்பரங்களும் இருக்கிறது. நான் இதில் கடைசியாக சொன்ன விளம்பரத்தை பற்றி சொல்வதை தவிர்த்து வந்தேன். ஆனால் இப்பொழுது சொல்லிவிட்டேன்.
இப்படி எதற்காக சொல்கிறேன் என்றால் நாங்கள் விளையாடிய காலத்தில் எங்களிடம் கிரிக்கெட் மட்டும் தான் இருந்தது. எனவே எங்களால் அதில் நன்றாக கவனம் செலுத்தி சிறந்த ஆல்ரவுண்டராக வர முடிந்தது. அனைத்து வடிவத்திலான கிரிக்கட்டையும் விளையாடுவது தற்பொழுது கடினமான ஒன்றுதான். ஆனாலும் இதை சிலரால் செய்ய முடியும்.
ஹர்திக் பாண்டியாவால் இந்த வேலைகளை செய்ய முடியும். அவரால் முடியாது என்று நாம் ஏன் மறைக்க முயற்சி செய்ய வேண்டும்? ஹர்திக் பாண்டியா கடினமாக உழைக்க வேண்டும். அப்படி அவர் உழைத்தால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் அவரால் திரும்பி வர முடியாமல் கிடையாது. மேலும் நாம் இன்னொரு மகேந்திர சிங் தோனி வேண்டும் என்று கேட்க வேண்டும். ஏனென்றால் அவரது ஒருநாள் கிரிக்கெட் ரன் சராசரி 50. இது மட்டும் இல்லாமல் அவர் சிறந்த கேப்டன் நல்ல விக்கெட் கீப்பர்!” என்று கூறியிருக்கிறார்!இந்திய அணிக்காக முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை 1983 ஆம் ஆண்டு வாங்கித் தந்த கபில்தேவ் சமீப காலங்களில் சில விஷயங்களில் மிகவும் சர்ச்சையான முறையில் பேசுவது வழக்கமாக இருக்கிறது. அதே சமயத்தில் தீவிரமாக சில விஷயங்களை உடைத்து பேசவும் ஆரம்பித்திருக்கிறார்!
சில மாதங்களுக்கு முன்பாக விளையாட்டில் ஸ்ட்ரெஸ் என்பது, நாம் விரும்பி விளையாடுகின்ற பொழுது கிடையாது. அது ஒரு ஆங்கில வார்த்தை. அதைப் பிடித்துக் கொண்டு இப்பொழுது எல்லோரும் அதை சொல்லத் தொடங்கி விட்டார்கள் என்று கூறியிருந்தார்.
இந்திய கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் பஞ்சத்தை பற்றி இப்பொழுது பேசும்பொழுது எங்களுடைய காலத்தில் கிரிக்கெட் மட்டுமே இருந்தது இப்பொழுது வீரர்கள் விளம்பரத்திலும் சேர்த்து வேலை செய்ய வேண்டியதாக இருப்பதால் கிரிக்கெட் கடினம் ஆகிவிட்டது என்பதாக பேசியிருக்கிறார்.
அவருடைய இந்தப் பேச்சில் இன்று, தற்பொழுது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா பல இடங்களில் நேரடியாகவே தாக்கி பேசியிருக்கிறார். மேலும் ஹர்திக் பாண்டியாவின் உடல் தகுதி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக அவருக்கு ஆதரவாக ரவி சாஸ்திரி பேசியிருந்தார். அதையும் கபில்தேவ் எதிர்த்து பேசி இருக்கிறார்.
இதுபற்றி கபில் தேவ் “நான் ரவி சாஸ்திரியின் கூற்றை மதிக்கிறேன். ஆனால் என்னால் அதை ஏற்க முடியாது ஏனென்றால், கிரிக்கெட் உலகில் டென்னிஸ் லில்லி போல காயத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டு திரும்பி வந்தவர்கள் யாரும் கிடையாது. மனித உடல் எந்த நிலையில் இருந்து வேண்டுமானாலும், மீண்டும் திரும்பி மேல் நிலைக்கு வர முடியும்.
ஹர்திக் பாண்டியா திறமையான வீரர். அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பி கடினமாக உழைத்தால் அவராலும் திரும்பி வர முடியும். பெரிய அளவில் உடல் எடை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளர் கார்ன்வெல் உடல் ஏன் பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் அவர் இதில் கடினமாக உழைத்தால் அவராலும் மீண்டு வர முடியும்.
இப்பொழுது உங்களிடம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மட்டும் இல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டி கிரிக்கெட் உள்ளன. இத்தோடு சேர்த்து உங்களுக்கு விளம்பரங்களும் இருக்கிறது. நான் இதில் கடைசியாக சொன்ன விளம்பரத்தை பற்றி சொல்வதை தவிர்த்து வந்தேன். ஆனால் இப்பொழுது சொல்லிவிட்டேன்.
இப்படி எதற்காக சொல்கிறேன் என்றால் நாங்கள் விளையாடிய காலத்தில் எங்களிடம் கிரிக்கெட் மட்டும் தான் இருந்தது. எனவே எங்களால் அதில் நன்றாக கவனம் செலுத்தி சிறந்த ஆல்ரவுண்டராக வர முடிந்தது. அனைத்து வடிவத்திலான கிரிக்கட்டையும் விளையாடுவது தற்பொழுது கடினமான ஒன்றுதான். ஆனாலும் இதை சிலரால் செய்ய முடியும்.
ஹர்திக் பாண்டியாவால் இந்த வேலைகளை செய்ய முடியும். அவரால் முடியாது என்று நாம் ஏன் மறைக்க முயற்சி செய்ய வேண்டும்? ஹர்திக் பாண்டியா கடினமாக உழைக்க வேண்டும். அப்படி அவர் உழைத்தால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் அவரால் திரும்பி வர முடியாமல் கிடையாது. மேலும் நாம் இன்னொரு மகேந்திர சிங் தோனி வேண்டும் என்று கேட்க வேண்டும். ஏனென்றால் அவரது ஒருநாள் கிரிக்கெட் ரன் சராசரி 50. இது மட்டும் இல்லாமல் அவர் சிறந்த கேப்டன் நல்ல விக்கெட் கீப்பர்!” என்று கூறியிருக்கிறார்!