17 வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 22ஆம் தேதி கோலாகலமாக இந்தியாவில் தொடங்க உள்ளது இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. பொதுத் தேர்தலின் காரணமாக ஐபிஎல் 2024 தொடரின் முதல் 15 நாட்களுக்கான அட்டவணையை மட்டுமே பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
முதலில் எட்டு அணிகளை கொண்டு மட்டுமே துவங்கப்பட்ட ஐபிஎல் சீசன் கடந்த இரு வருடங்களாக 10 அணிகளாக மாற்றப்பட்டு வெற்றிகரமாகநடைபெற்று வருகிறது. புதிய அணிகளான குஜராத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
இதில் லக்னோ அணி பஞ்சாப் அணியில் இருந்து விலகிய கேஎல் ராகுலை கேப்டனாக நியமித்தது. கடந்த இரு சீசன்களிலும் சிறப்பாக விளையாடி வரும் லக்னோ அணிக்கு கௌதம் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் நீ போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு நாக்கோட்டில் மும்பை அணியிடம் தோற்று லக்னோ அணி வெளியேறியது.
தொடரின் பாதியில் கே.எல். ராகுல் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் குரனல் பாண்டியா லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் கே எல் ராகுல் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்க துணை கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த நிக்கோலஸ் பூரானை லக்னோ அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வரும் நிக்கோலஸ் பூரா 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து இரண்டு அரை சதங்களுடன் 358 ரன்கள் குவித்துள்ளார். 179.94 ஸ்ட்ரைக் ரேட் உடன் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் இவர் உலகெங்கிலும் நடைபெற்ற t20 தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக லக்னோ அணி அவரைத் துணை கேப்டன் ஆக்கியுள்ளது.
லக்னோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அணி கேப்டன் கே எல் ராகுல் 29 ஆம் நம்பர் கொண்ட துணை கேப்டன் ஜெர்சியை நிக்கோலஸ் பூரானுக்கு வழங்கினார். லக்னோ அணி வருகிற மாதிரி 24ஆம் தேதி அன்று ஜெய்பூரில் ராஜஸ்தான் ராயல் அணியைச் சந்திக்கிறது. லக்னோ அணி வீரர்களின் முழு பட்டியலை தற்போது காணலாம்.
லக்னோ அணி விபரம் :
கேஎல் ராகுல் (கேட்ச்), குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, தேவ்தத் படிக்கல், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், க்ருனால் பாண்டியா, யுத்வீர் சிங், பிரேரக் மன்கட், யாஷ் தாக்கூர் மிஸ்ரா, மார்க் வூட், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், கே. கௌதம், ஷிவம் மாவி, அர்ஷின் குல்கர்னி, எம். சித்தார்த், ஆஷ்டன் டர்னர், டேவிட் வில்லி, முகமது. அர்ஷத் கான்.