உலக கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்தவர்
விராட் கோலி . அவர் 2008 ஆம் ஆண்டில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார், அதன் பின்னர் இந்த விளையாட்டில் சிறந்து விளங்க தொடங்கினார் .
இந்தியாவுக்காக மூன்று வடிவ போட்டிகளிலும் , நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி , இந்திய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக இருந்து வருகிறார். விராட் கோலி ஒருநாள் சர்வதேச போட்டிகளில் வேகமாக 8,000, 9,000, 10,000 மற்றும் 11,000 ரன்களை எட்டிய வீரர் ஆவார்.
விராட் கோலி இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்தவர். ஒரு காலண்டர் ஆண்டில் (2014) டி20யில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரராவார். 2013 ஆம் ஆண்டில், அவர் ஒருநாள் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் .2017 ல் அணியின் கேப்டனாக்கப்பட்டார் . அவரது தலைமையின் கீழ் பல மைல்கல்களை எட்டியது .
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ICC ODI சிறந்த வீரருக்கான விருதுகளை அவர் பெற்றுள்ளார். அவர் தனது ஆக்ரோஷமான கேப்டன்சி மற்றும் களத்தில் ஒருபோதும் விட்டுக்கொடுக்காத , தன்மைக்கு பெயர் பெற்றவர். அணியை எப்படி முன்னோக்கி நகர்த்துவது என்று தெரிந்த திறமையான வீரர்.
ஆனால் கடந்த இரண்டு , மூன்று வருடங்களாக விராட் கோலியின் ஆட்டம் சொல்லிகொள்ளும்படி இல்லை . கடந்த வருடம் நடந்த உலகக்கோப்பை போட்டியில் பாக்கிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை தவிர மற்ற போட்டிகளில் சிறந்த பங்களிப்பை வழங்கமுடியவில்லை. தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியவுக்கு எதிரான தொடரில் கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் . அதனை தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது போட்டியில் மட்டும் அரைசதம் அடித்தார் .
இதனையடுத்து பாக்கிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் விராட் கோலியை பற்றி கூறுகையில் ” விராட் கோலி ஒரு சிறந்த பேட்டர், ஆனால் எனது காலத்தில் எங்கள் அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தனர், மேலும் விராட் கோலி எனது காலத்தில் எங்களுக்கு எதிராக விளையாடி இருந்திருந்தால் 30 அல்லது அதிகபட்சமாக 50 சதங்களை கூட அடித்திருக்க மாட்டார். வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் விராட் கோலிக்கு எளிதாக ரன்களை கொடுத்திருக்க மாட்டார்கள். இருப்பினும், பந்துவீச்சின் தரத்தை கருத்தில் கொண்டு அந்த சதங்கள் தரமானதாக இருந்திருக்கும் ” என்று கூறினார் .
2010 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில், இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .