கிரிக்கெட் செய்திகள்

ஒருகாலத்தில் நான் பந்துவீச வந்தால் இந்த இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் முகம் வாடிப் போகும் – சக்லைன் முஸ்டாக் பரபரப்பு பேச்சு!

Saqulain

இன்றைய காலத்தில் ஆஃப் ஸ்பின்னர்களில் குறிப்பிடதக்கவர்களாக ரவிச்சந்திரன் அஷ்வின் , நாதன் லியான் இருக்கிறார்கள் . இவர்களுக்கு முன் ஹர்பஜன் சிங் மற்றும் முத்தையா முரளிதரன் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே,ஆஃப் ஸ்பின்னில் முடிசூடா மன்னன் என்றால் அது பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக். இவர் பந்துவீச வந்தால் எதிர்த்தாடும் பேட்டர்கள் , பயத்தின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள்.

1995 முதல் 2003 வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய காலத்தில் , சக்லைன் தனது தூஸ்ராவின் மூலம் எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் , மேலும் அவர் விளையாடிய காலத்தில் , குறைந்த இலக்கே எதிரணிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் , தன்னுடைய சிறப்பான பந்துவீச்சின் மூலம் அந்த போட்டிகளில் வெற்றிபெற உதவினார் .

இவருக்கு எதிரணிகளாக ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை இருந்தால் அவருக்கு கொண்டாட்டம்தான் . எப்போதையும் விட சிறந்த பங்களிப்பை அந்த போட்டிகளில் வழங்குவார் . வெள்ளைப்பந்து , சிவப்புப்பந்து என இருபரிமாணத்திலும் கலக்கியவர் . ODIகளில், இந்திய அணிக்கு எதிராக 36 போட்டிகளில் இருந்து 57 விக்கெட்டுகளை எடுத்தார் , என்பது குறிப்பிடத்தக்கது .

அவரின் பழைய நினைவுகளை பற்றி கூறும்போது , அவரை எதிர்த்து விளையாடிய வீரர்களில் 1990கள் மற்றும் 2000களில் நட்சத்திரங்கள் நிறைந்த பேட்டிங் வரிசையில், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் பந்துவீசுவதற்கு கடினமானவர்கள் என்று கூறியுள்ளார் .

சக்லைன் முஷ்டாக் கூறுகையில் “ஒரு காலத்தில் நான் பந்து வீசுவதைப் பார்த்ததும் அஜய் ஜடேஜாவின் முகம் வாடிப் போகும் . அவர் எனக்கு எதிராக ஒரு போதும் நீடித்து விளையாடியதில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இதை அவரே அடுகளத்திற்கு வெளியில் வந்து என்னிடம் கூட சொன்னார் ” என்று கூறினார் .

மேலும் அவர் கூறுகையில்
“சச்சின் மற்றும் டிராவிட் இருவரையும் நான் வெளியேற்றிவிடுவேன் , ஆனால் எங்களுக்குள் அது ஒரு நீண்ட போராக அமையும் . மேலும் எலியைப் பிடிப்பதற்கும் புலியைப் பிடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இதன் படி, நீங்கள் அவர்களைப் பிடிக்க முடியாது. நான் நீண்ட நாட்கள் , அதிகமாக யோசிக்க வேண்டியிருந்தது அவர்களை வீழ்த்துவதற்கு , சில நேரங்களில் நான் 20 ஓவர்கள் தாண்டியும் வீசினேன், அவர்களுக்கு எதிராக என்னால் திறமையாக பந்து வீச முடியவில்லை.எனவே அது எளிதல்ல.உலகத் தரம் வாய்ந்த பேட்டர்களாக உருவாகுவதற்கு , உங்கள் சிந்தனையை விரிவுபடுத்த வேண்டும். , பொறுமையைக் காட்டுங்கள், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்” என்று கூறினார்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top