ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் பெரும் அவலுடன் , எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்குகிறது .10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இந்த ஆண்டிற்கான ஐபிஎல்-ன் முதல் போட்டி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குமிடையே வருகின்ற மார்ச் 31ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் துவங்கயிருக்கிறது.
இதனையொட்டி அனைத்து அணியினரும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
கடந்த ஆண்டு நடைபெற்ற சீசனில் இரண்டு இளம் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் அறிமுகமாகி அசத்தினார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்திரி மற்றும் லக்னோ அணியின் மோசின் கான் , இருவரும் நடப்பு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விளையாட போவதில்லை என்ற தகவல் வெளியாகியிள்ளது .
இருவரும் கடந்த 2022 ஏலத்தில் 20 இலட்சங்களுக்கு வாங்கப்பட்டார்கள் .இருவரும் தொடர்ந்து மிரட்டலாக பந்துவீசி அசத்தி வந்தார்கள். முகேஷ் சவுத்ரி 13 போட்டிகளில் 16 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். மோசின் 9 போட்டிகளில் 5.97 எகனாமியுடன் 14 விக்கெட்களை சாய்த்திருந்தார் .
தற்போது இந்திய அணிக்கு ஒரு இளம் இடதுகை பந்துவீச்சாளர் வேண்டும் என்பதால் இந்த இருவரின் மீதும் அதிக எதிர்பார்ப்புகள் காணப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளது . இது இரு அணி ரசிகர்களையும் கவலையடைய செய்துள்ளது.
முகேஷ் சவுத்ரி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், கூறுகையில்
”16ஆவது சீசனில் முகேஷ் சவுத்ரி பங்கேற்பார் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. அவர் பங்கேற்கவில்லை என்றால், அது சிஎஸ்கேவுக்கு பெரும் இழப்பு” என்று கூறியுள்ளார்.
முகேஷ் சவுத்ரி தற்போது பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்கி பயிற்சி பெற்று வருவது குறிப்படதக்கது.
மற்றொரு இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர், லக்னோ வீரர் மோசின் கான். இவர் கடந்த சீசனில் பஞ்சாப்புக்கு எதிராக 3/24, டெல்லிக்கு எதிராக 4/16 சிறந்த பந்துவீச்சுகளை பதிவு செய்திருந்தார். மோசின் கானின் பெரிய பலமே அவரின் உயரம் தான். மேலும் அவர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஆவார். இந்திய களத்திலேயே அட்டகாசமாக ஸ்விங் செய்த இவரால், இந்த வருட ஐபிஎல்லில் விளையாட முடியாமல் போனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விரு வீரர்களும் இல்லாது அவர்களது அணியில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தபோகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .