இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பைக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில், இன்னும் மூன்று நாட்களில் தொடங்கவிருக்கும் 2023 இந்தியன் பிரீமியர் லீக் மீது அனைவரது பார்வையும் திரும்பி உள்ளது.
வழக்கம்போல டெல்லி அணி ஆனது இளம் பட்டாளத்துடன் களம் இறங்க உள்ளது. கேப்டன் பண்ட் காயத்தினால் விளையாட முடியாமல் போனது. தற்பொழுது கேப்டனாக டேவிட் வார்னர் அறிவிக்கப்பட்டுள்ளார் . கங்குலி இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இந்த அணியில் விளையாடக்கூடிய பிருத்வி ஷா மற்றும் சர்பராஸ் கான் மீது அதிக எதிர்பார்ப்புகள் காணப்படுகிறது.
தேர்வாளர்களும் இந்த சீசனைத் தொடர்ந்து கவனிப்பார்கள், மேலும் இது 20 ஓவர் என்பதால், இதில் உள்ள வித்தியாசம் காரணமாக உலகக் கோப்பைக்கு முந்தைய ஆண்டிற்கான மீதமுள்ள ஓடிஐ களுக்கான இந்தியத் தேர்வை இது முற்றிலும் பாதிக்கலாம், ஆனால் ஓரளவிற்கு அது பாதிக்கும்.
தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக பணியாற்றி வரும் , பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி, தனது அணியில் உள்ள இளம் திறமையாளர்களில் ஒருவர் மீண்டும் இந்திய அணிக்கு விரைவில் திரும்புவார் எனக் கூறுகிறார்.
ரோஹித் சர்மா மற்றும் அணியின் தேர்வாளர்கள் அவரை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் . டெல்லி அணியின் இளம் வீரர் இந்தியாவுக்காக விளையாட தயாராக இருப்பதாக கங்குலி கூறுகிறார்.
பிருத்வி ஷா குறித்து கங்குலி கூறுகையில்
” பிருத்வி ஷா இந்தியாவுக்காக விளையாட தயாராக இருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா ? என்பது சூழ்நிலையை பொறுத்தது. ரோஹித் ஷர்மாவும், தேர்வாளர்களும் அவரை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அவர் ஒரு நல்ல வீரர் மற்றும் அணியில் விளையாடுவதற்கும் தயாராக இருக்கிறார் ”என்று கூறினார்.
பிருத்வி ஷா கடைசியாக 2021 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்காக விளையாடினார். இந்த ஆண்டு ஜனவரியில், நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடருக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவருக்கு இந்திய ப்ளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை , அணி நிர்வாகம் முதல் தேர்வாக தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில்லை ஆதரித்தது
மேலும் இந்திய அணி குறித்து கங்குலி பேசுகையில் ” இந்தியாவுக்காக 15 சூப்பர் ஸ்டார்கள் விளையாடுகிறார்கள். நீங்கள் இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள் என்றால் ! நீங்கள் ஏற்கனவே எனக்கு சூப்பர் ஸ்டார். ஆனால் திறமையால் நான் சுப்மான் கில் மற்றும் பிருத்வி ஷாவை மிகவும் நேசிக்கிறேன். அவர்கள் இருவரும் சிறந்த வீரர்கள். இந்திய கிரிக்கெட்டுக்காகவும், டெல்லி அணிக்காகவும் ரிஷப் பண்ட் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்படுகிறார்” என்று கூறினார்.