கிரிக்கெட் செய்திகள்

பாகிஸ்தானை வென்ற ஆப்கானிஸ்தான் – சோயப் அக்தர் பாராட்டு

Akthar

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் அணி முதன்முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரை வென்று சாதித்துள்ளது .

இதில் சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தானை சோயப் அக்தர் பாராட்டினார். முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர், இந்திய துணைக் கண்டத்தின் இந்த மாதிரி சிறிய அணிகள் வளர்வதற்கு சிறந்த வழிகளை ஏற்படுத்தினால் , அவர்களும் சிறந்த கிரிக்கெட் நாடாக மாறுவார்கள் என்று கூறியுள்ளார் .

முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் நிர்ணயித்த இலக்கை , 4 விக்கெட்டுகள் இழந்து , 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை பெற்றது. அந்த அணியின் மூத்த வீரர் முகமது நபி இரண்டு போட்டியிலும் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிகளிலும் முக்கிய பங்கு வகித்தார். இதனால் அவர்களுக்கு வெற்றி எளிதானது .

ஆனால் பாகிஸ்தானின் இளம் வீரர்கள் தங்களது பங்களிப்பை கொடுக்க முடியாமல் ,டாப்-ஆர்டர் பேட்டர்கள் அனைவரும் இரண்டு ஆட்டங்களிலும் தடுமாறினர். இரண்டாவது போட்டியில் இமாத் வாசிம் மற்றும் ஷதாப் கான் இடையேயான வலுவான 67 ரன் பார்ட்னர்ஷிப் , இரண்டாவது ஆட்டத்தில் 130 ரன்களுக்கு அவர்களின் அணியை உயர்த்தியது, இறுதியில் அந்த ரன்னும் அவர்கள் வெற்றிக்கு போதுமானதாக இல்லை.

இது குறித்து சோயப் அக்தர் கூறுகையில் ” நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆப்கானியர்கள் தங்களது சிறந்த பங்களிப்புகளை வழங்கினால் , அவர்கள் உலகின் முன்னணி நாடாக மாறலாம். ஏனென்றால் இவர்களிடம் தீவிரவாதம் உள்ளது. தீவிரவாதத்தை நேர்மறையாக, முதிர்ச்சியுடன் வழிநடத்த முடிந்தால், அவர்கள் உலகின் சிறந்தவர்களாக மாற முடியும். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆப்கானிய சகோதரர்கள் வெற்றி பெற்றுள்ளனர் ” என்று கூறினார் .

மேலும் அவர் கூறுகையில் ” வலுவாக கம்பேக் செய்யுங்கள். நீங்கள் ஆப்கானிஸ்தானுக்கு கடுமையான போட்டியை கொடுக்க உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது கடினமாகத் தோன்றலாம் ஆனால் ஆப்கானிஸ்தான் சில கடினமான கிரிக்கெட்டை விளையாடியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் முதல்முறையாக வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது . மேலும் அவர்கள் விளையாடுவதன் மூலம் அதைச் செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எப்பொழுதும் நல்ல செய்திகள் தேவை. ஆப்கானிஸ்தான் நண்பர்களிடமிருந்து எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. நான் காபூலுக்கு வர விரும்புகிறேன் ” என்று கூறினார்

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top