கிரிக்கெட் செய்திகள்

ஸ்ரேயஸ் ஐயருக்கு மாற்றாக யாரும் எதிர்பார்க்காத வீரரை கேப்டனாக்கி அசத்திய கொல்கத்தா அணி !

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16வது சீசன் போட்டிக்கான கேப்டனாக நிதிஷ் ராணாவை நியமித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இதுவரை இரண்டு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது. 4 வருங்களுக்கு பிறகு , இறுதியாக தங்கள் கோட்டையான ஈடன் கார்டனில் விளையாட இருக்கிறார்கள் .மேலும் அவர்களின் 3வது ஐபிஎல் கோப்பையைப் வெல்லவும் விரும்புவார்கள் . 2012 மற்றும் 2014ல் கோப்பையை வென்று, அதன்பின் 2021ல் இயோன் மோர்கனின் தலைமையின் கீழ் இறுதிப்போட்டிக்கு நுழைந்தார்கள். ஆனால் தோனி மற்றும் அவரது படை சிறப்பாக விளையாடி அவர்களின் 4வது ஐபிஎல் கோப்பையை வென்றார்கள்.

டெல்லியைச் சேர்ந்த இடக்கை பேட்ஸ்மேன் நிதிஷ் ராணா இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசனில் தனது அணியை வழிநடத்த உள்ளார். ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்ளும் போது, ​ அணியில் ஸ்ரேயஸ் ஐயர் விளையாட வேண்டும் என்பதற்காக தற்பொழுது அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதனால் இந்த ஐபிஎல் தொடரை மிஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா அணியில் டிம் சவுத்தி மற்றும் சுனில் நரைன் போன்ற அனுபவமிக்க வீரர்கள் இருப்பதால், அவர்களில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படுவார் என அனைவரும் நினைத்தார்கள். ஆனால் அணியின் நிர்வாகம் நிதிஷ் ராணா பக்கம் திரும்பி உள்ளது . ஐபிஎல் வரலாற்றில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 7 கேப்டன்கள் இருந்துள்ளனர் . நிதிஷ் ராணா தற்போது மற்றும் அவர்களில் 4 பேர் இடது கை பேட்டர்கள். சௌரவ் கங்குலி, கெளதம் கம்பீர், இயான் மோர்கன் மற்றும் நிதிஷ் ராணா போன்றவர்கள் அனைவரும் இடது கை டாப்-ஆர்டர் பேட்டர்கள். மேலும் ஆச்சரியம் என்னவென்றால், கொல்கத்தா அணி 3 இறுதிப் போட்டிகளில் விளையாடி அதில் கெளதம் கம்பீர் தலைமையில் வெற்றி பெற்றது மற்றும் வெற்றி பெறாத இறுதிப் போட்டி இயோன் மோர்கன் தலைமையில் நடைபெற்றது.

ராணா 2018 இல் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார் மற்றும் அவர்களின் அனைத்து போட்டிகளிலும் விளையாடி வருகிறார். ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில், ராணாவின் நிலைத்தன்மைக்காக அவருக்கு இந்தப் பதவி வழங்கப்படுவதாக பலர் நம்புகிறார்கள், மேலும் கேகேஆர் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் உடன் இணைந்து ‘சிட்டி ஆஃப் ஜாய்’ வாசிகளுக்கு பெருமை சேர்க்கும் நைட்ஸ் அணிக்காக மீண்டும் ஒருமுறை ஐபிஎல் கோப்பையை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவாரஸ்யமாக, இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அதிக ரன் குவித்த இரண்டாவது வீரர் நிதிஷ் ராணா ஆவார். ராணா கடந்த சீசனில் 361 ரன்கள் எடுத்தார். ராணாவின் ஐபிஎல் விளையாட்டை பொறுத்தவரை, பேட்ஸ்மேன் ஆக 91 ஆட்டங்களில் விளையாடி 27.96 சராசரி மற்றும் 134.22 ஸ்ட்ரைக் ரேட்டில் 2181 ரன்கள் எடுத்துள்ளார்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top