சென்னை சூப்பர் கிங்ஸின் வரலாற்றில் , ஏலத்தில் 16.25 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டவர் ஸ்டோக்ஸ் . கடந்த வாரம் இந்தியா வந்து தனது புதிய அணி வீரர்களுடன் இந்த சீசனுக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு அகமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது .
அவரின் காயத்தின் தன்மையை அணி நிர்வாகம் தொடர்ந்து கவனித்து வருகிறது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கூறுகையில் ” ஐபிஎல்-ல் ஹோம் மற்றும் வெளியூர் என இந்த சீசன் விளையாட உள்ளோம். சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் முதல் ஹோம் கேமை ஏப்ரல் 3 ஆம் தேதி விளையாடும். தற்போது மைதானம் புதிதாக இருக்கிறது . முதல் ஹோம் கேம், சூழல் இந்த உலகத்திற்கு வெளியே இருப்பது போல் உணர்த்த போகிறது” என்று கூறினார் .
மேலும் அவர் கூறிகையில் “ஸ்டோக்ஸ் பந்துவீசுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அவர் முழங்காலில் ஊசி போட்டதால், நேற்று முதல், முட்டியை பாதுகாப்பாக வைத்திருந்தார் ” என்று கூறினார்.
ஸ்டோக்சின் உடற்தகுதி பற்றி பேசிய அவர் “சென்னை மற்றும் இங்கிலாந்தைச் சார்ந்த பிசியோக்கள் மிகவும் நெருக்கமாக வேலை செய்கிறார்கள். எனக்கு தெரிந்த வரையில், அவர் போட்டியின் முதல் சில ஆட்டங்களில் அதிகம் பந்துவீச மாட்டார்… சில வாரங்கள் ஆகலாம். எனக்கு 100% உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் நாங்கள் அவரை போட்டியின் ஒரு கட்டத்தில் பந்துவீசச் செய்வோம்.
என்னால் காத்திருக்க முடியாது. மேலும் ஸ்டோக்சும் அதை முற்றிலும் விரும்புவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த பெரிய வீரர்களின் விஷயம் இதுதான், அவர்கள் பொதுவாக ஒரு பெரிய ஸ்டேஜ்களை விரும்புகிறார்கள் மற்றும் அதில் சிறந்ததைச் செய்கிறார்கள்” என்று கூறினார்.
சென்னை ரசிகர்கள் பற்றி கூறும்போது ” சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வெளியே வந்தவுடன் நம்பமுடியாத உரத்த கூட்டத்தின் சத்தத்தின் மூலம் சிறந்த உள்ளங்களை கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறேன் ” என்று கூறினார்
ஸ்டோக்ஸ் வரவு பற்றி பேசும்போது
“இந்தியாவிற்கு வந்ததில் இருந்து ஸ்டோக்ஸ் மிகவும் நன்றாக பந்தை அடித்தார் . அவர் பிளேஆஃப்களை சிறப்பாக பயன்படுத்த முயல்வார் என்றார் . மேலும் அவர் என்னுடைய கண்ணோட்டத்தில், நெட்ஸில் 20 அல்லது 30 ஓவர்கள் வீசுவார் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார் .
மேலும் அவர் கூறுகையில் “ஆஷஸில் பென் ஸ்டோக்ஸ் தனது சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதற்கு உடல் தகுதி வேண்டும். இது மிகவும் தொழில்முறையானது, அனைத்து தேசிய வாரியங்களுடனும் மிகவும் நெருக்கமாக செயல்படுகிறது, மேலும் எங்கள் பிசியோ ஏற்கனவே இங்கிலாந்து ஃபிசியோக்களுடன் பணிபுரிந்துள்ளார் என்பது எனக்குத் தெரியும். அவருடைய சிறந்ததைப் பார்க்க விரும்புகிறேன். ஆஷஸ் கிரிக்கெட்டில் இரு அணிகளும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதில் கவனமாக இருக்க வேண்டும், மேலும் இது பார்க்க நம்பமுடியாத தொடராக இருக்கும் என்று நினைக்கிறேன் ” என்று கூறினார்.