கிரிக்கெட் செய்திகள்

‘அது ரஷித், வார்னே அல்லது முரளிதரனாக இருந்தாலும் சரி…! எங்களது மட்டை வீச்சாளர்கள் அடித்து விளையாடுவார்கள் – ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்கக்கரா பேட்டி

Rr

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 23வது போட்டியில், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது .

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி குஜராத் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இதனை தொடர்ந்து குஜராத் அணியில் ஓபனர்களாக சாகா மற்றும் கில் களம் இறங்கினார்கள். முந்தைய போட்டிகளை போலவே ராஜஸ்தான் அணியின் வேகபந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் இந்த ஆட்டத்திலும் தனது விக்கெட் வேட்டையை முதல் ஓவரிலே தொடர்ந்தார்.

மில்லர் மற்றும் அபினவ் மனோகரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் குஜராத் அணி 20 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 179/7 ரன்களை எட்டியது, சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். இதற்கிடையில், ஷிம்ரோன் ஹெட்மியர் 26 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் அணிக்காக பந்துவீச்சாளர் முஹம்மது சமி மூன்று விக்கெடுகளை கைப்பற்றி இருந்தார்.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் குஜராத் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரசித் கானின் ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் அடித்தது,ஆட்டத்தில் மிக பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

போட்டி முடிந்த பிறகு ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு பின்னான சந்திப்பில் டிரெஸ்ஸிங் ரூமில் பயிற்சியாளர் சங்கக்கரா பேசும்போது “கேப்டன், நீங்கள் பவர் பிளையில் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரஷித் கான் ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் அடித்தது தான் இந்த ஆட்டத்தில் கேம் சேஞ்சிங் மொமெண்டாக இருந்தது. அவர்களின் சிறந்த பந்துவீச்சாளர், உலகின் சிறந்த டி20 சுழற்பந்து வீச்சாளர் என்று சிலர் கூறுகின்றனர். நீங்கள் விளையாட்டில் இருக்கும்போது எதுவும் சாத்தியம் என்பதை இது காட்டுகிறது. அது ரஷித் கான், ஷேன் வார்னே அல்லது முரளிதரனாக இருந்தாலும் சரி, நீங்கள் களத்தில் இருக்கும் போது யாராக இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் பந்தை தான் விளையாடப் போகிறீர்கள் மனிதர்களை அல்ல நீங்கள் அவரின் பந்துகளை சிறப்பாக கையாண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” இன்று பேசியிருந்தார்.

இந்தத் தொடரில் ராஜஸ்தான் அணி விளையாடிய 5 போட்டிகளில் நான்கு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top