கிரிக்கெட் செய்திகள்

ஹைதராபாத் அணியை ஊதி தள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் – ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Csk

ஐபிஎல் 16வது சீசனில் இன்று நடைபெற்ற 29 வது போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடினர்கள்.இந்த போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி தனது விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் பரிகொடுத்து வந்தது.சென்னை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஹைதராபாத் அணிக்காக அபிஷேக் ஷர்மா அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். சென்னை அணியின் இளம் வேப்பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். சென்னை அணியின் பீல்டிங் கடந்து போட்டியை போல இல்லாமல் இந்த போட்டியில் சிறப்பாக இருந்தது. ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனை துரத்தி விளையாடிய சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைந்தது. அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ருதுராஜ் மற்றும் கான்வே முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்கள். துரதிஷ்டவசமாக ருதுராஜ் ரன் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய காணவே இந்த தொடரில் தனது மூன்றாவது அரை சதத்தை பதிவு செய்தார்.

சென்னை அணி 18.4 ஓவர்களில் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக கடந்தது. கான்வே 77 ரன்கள்டனும் மொயின் அலி 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். ஹைதராபாத் அணிக்காக மார்க்கண்டே இரண்டு விக்கெடுகள் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top