இந்தியன் பிரீமியர் லீக்
2023 இன் ஆறாவது ஆட்டத்தில் நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஏப்ரல் 3 திங்கள் அன்று சென்னையில் உள்ள புகழ்பெற்ற எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உடன் மோதுகிறது.
எம்.எஸ். தோனி மற்றும் சென்னை அணி சுரேஷ் ரெய்னா இல்லாமல் முதல் முறையாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்க உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 1426 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சென்னை அணி இன்று விளையாடுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியின் கடைசி ஆட்டம் MI க்கு எதிராக, மே 7, 2019 அன்று நடந்தது. சென்னை அணி முதலில் நடைபெற்ற, நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த பிறகு போட்டிக்கு வந்தது.
சென்னை அணியை பொறுத்தவரையில் அணியின் பேட்டிங் பலமாக இருந்தாலும்,பந்துவீச்சில் எப்போதும் போல இந்த முறையும் மிகவும் மோசமாக உள்ளது. கடந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்தி, ஐபிஎல் 2023 இன் முதல் அரைசதத்தை அடித்தார். புதுமுக வீரரான வேகப்பந்துவீச்சு ஆள்ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். வரவிருக்கும் மோதலில் தங்கள்வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் வெற்றிப் பாதைக்கு வருவார்கள் என்று சிஎஸ்கே அணி நிர்வாகமும் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
மறுபுறம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான அபார வெற்றியுடன் தொடங்கியுள்ளது. கைல் மேயர்ஸின் 73 ரன்கள் மற்றும் மார்க் வூட்டின் ஐந்து விக்கெட்டுகள், ராகுல் தலைமையிலான அணி பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐபிஎல் விளையாட்டை வென்ற முதல் அணியாக மாற உதவியது.
சென்னை அணியினர் அவர்களின் சொந்த மைதானத்தில் இதுவரை விளையாடிய 56 ஆட்டங்களில் 40 வெற்றி, 15 தோல்வி மற்றும் 1 (சூப்பர் ஓவரில் தோற்றது) சமனில் உள்ளது. ஈடன் கார்டனில் விளையாடிய 71 ஆட்டங்களில் 45ல் வென்ற கேகேஆர் மற்றும் வான்கடே ஸ்டேடியத்தில் விளையாடிய 68ல் 41ல் வென்ற MIக்கு பிறகு, சொந்த மண்ணில் ஐபிஎல் அணி பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் இது மூன்றாவது அதிகபட்சமாகும்.
2019 முதல், இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய வந்த தோனி இன்னும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை. அவர் 2019 இல் மைதானத்தில் 161 ஸ்டிரைக் ரேட்டில் 4 இன்னிங்ஸ்களில் 193 ரன்கள் எடுத்தார். 2019 இல் சேப்பாக்கத்தில் அவரது ஸ்டிரைக் ரேட் 161 இந்த மைதானத்தில் அவரது அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் அவருக்கு சிறந்ததாக இருந்துள்ளது . இந்த ஐபிஎல் மைதானத்தில் 50க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த ஒரே பேட்ஸ்மேன். இவர் 64 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.