ரெகுலர் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் சாலை விபத்தில் சிக்கியதால் ஐபிஎல் 2023 ல் விளையாட முடியாமல் போனது. அவர் தற்போது பல காயங்களில் இருந்து மீண்டு வருகிறார்.ரிஷப் பண்ட் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் டேவிட் வார்னர் டெல்லி அணியை வழிநடத்துவார். என நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து ஐபிஎல் 2023க்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரிஷப் பண்டிற்கு பதிலாக பெங்கால் கீப்பர்-பேட்டர் அபிஷேக் போரல் சேர்க்கப்பட்டு உள்ளார்,என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
20 வயதான போரல் இதுவரை 16 முதல் தர போட்டிகள், மூன்று லிஸ்ட் ஏ போட்டிகளிலும் , மூன்று டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் இடது கை பேட்டர். பிப்ரவரி மாதம் 2022 இல் பரோடாவுக்கு எதிராக முதல்தர ஆட்டத்தில் அறிமுகமானார். அவர் இதுவரை 6 அரை சதங்களுடன் 30.21 சராசரியில் 695 ரன்கள் எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டிலும் அரைசதம் அடித்துள்ளார்.
இந்த சீசனில் ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக போரல் சிறப்பான பங்களிப்பை வழங்கினார். லீக் ஆட்டங்களில் ஹரியானாவுக்கு எதிராக 49 ரன்களும், மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான முதல் அரையிறுதியில் 51 ரன்களும், சௌராஷ்டிராவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 50 ரன்களும் எடுத்தார்.
அணியின் பயிற்சியாளர் பாண்டிங் ரிஷப் பண்ட் பற்றி பேசும்போது “அவர் ஒரு ஒவ்வொரு போட்டியிலும் டக்அவுட்டில் என் அருகில் அமர்ந்திருப்பார். ஆனால் அது சாத்தியமில்லை என்றால், சாத்தியமான வழிகளில் அவரை அணியின் ஒரு பகுதியாக மாற்ற விரும்புகிறோம். அவருடைய எண்ணை, நமது சட்டைகளிலோ அல்லது தொப்பிகளிலோ வைத்திருக்கலாம். அவர் எங்களுடன் இல்லாவிட்டாலும், அவர் எங்கள் தலைவர் என்பதை தெளிவுபடுத்துவதற்காக” என்று பேசியுள்ளார்.
விக்கெட் கீப்பர் குறித்து பாண்டிங் கூறும்போது
“நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. சர்ஃபராஸ் எங்களுடன் இணைந்துள்ளார், அதைத் தீர்மானித்து முடிவு செய்ய, வரும் பயிற்சி ஆட்டங்களைப் பார்ப்போம். ரிஷப் விட்டுச் சென்ற ஒரு பெரிய ஓட்டை அது. இம்பாக்ட் பிளேயர் விதி வருவதால், நாம் அதை பல வழிகளைப் பயன்படுத்தலாம்” என்று கூறினார் .