2023 பார்டர் கவாஸ்கர் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சற்றுமுன் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் வெற்றி தோல்வி இன்றி முடிவுக்கு வந்திருக்கிறது!
இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்ய, பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள் உஸ்மான் கவஜா மற்றும் கேமரூன் கிரீன் மிகச் சிறப்பாக விளையாடி சதங்கள் அடித்து அணிக்கு 480 ரன்கள் தந்தார்கள்!
இதை அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு இளம் வீரர் சுப்மன் கில் அற்புதமாக சதம் அடித்து அருமையான துவக்கத்தை தந்தார். இதற்குப் பிறகு அணியை மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் விராட் கோலி அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டு அபாரமாக விளையாடி 186 ரன்கள் விளாசி 91 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற உதவி செய்தார்.
மேற்கொண்டு விளையாடிய ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்த பொழுது ஆட்டம் டிராவில் முடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 90 ரன்கள், மார்னஸ் லபுசேன் 63 ரன்கள் எடுத்தனர்.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட விராட் கோலி பரிசளிப்பின் போது பேசுகையில்
” ஒரு வீரராக நான் என் மீது எதிர்பார்ப்புகள் வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகள் நான் விளையாடிய டெம்போ மற்றும் டெம்ப்லேட் உடன் தற்பொழுது விளையாடவில்லை என்று நினைக்கிறேன். இதனால் நான் செய்ய முயற்சிப்பது ஒன்றுதான், நாக்பூர் முதல் இன்னிங்ஸ் இருந்து நான் நன்றாக பேட்டிங் செய்வதாக உணர்ந்தேன்!” என்று கூறினார்!
மேலும் தொடர்ந்து பேசிய விராட் கோலி
” நான் கடந்த காலங்களில் விளையாடியது போல் தற்காலத்தில் விளையாடவில்லை என்கின்ற கண்ணோட்டம் எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. ஆனால் நான் தற்பொழுது நன்றாகத்தான் விளையாடுகிறேன் என்பது நம்பிக்கையாகவும் இருந்தது. ஒரு டீசண்டான விக்கெட் கிடைத்தால் என்னால் ஒரு மிகப்பெரிய இன்னிங்ஸை விளையாட முடியும் என்று நம்பினேன். தற்பொழுது அதுதான் நடந்தது!” என்று கூறியிருக்கிறார்!