நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையேயான ஐபிஎல் போட்டி குவகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்ய அதனை தொடர்ந்து பேட்டிங் இறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ப்ரசிம்ரன் சிங் 34 பந்துகளுக்கு 60 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இருந்தார். 11வது ஓவர் வரை மிகவும் மெதுவாக ஆடிக் கொண்டிருந்த அணியின் கேப்டன் தவான் அதன் பிறகு தனது பேட்டிங்கை டாப் கியருக்கு மாற்றி ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார். இறுதியில் அவர் 56 பந்துகளுக்கு 86 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.
பீல்டிங் செய்யும் போது கையில் ஏற்பட்ட காயத்தினால் ராஜஸ்தான அணியின் தொடக்க வீரர் பட்லர் பேட்டிங் ஓபன் செய்ய வரவில்லை. அதனால் அந்த இடத்திற்கு ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினை அணி நிர்வாகம் களம் இறக்கியது.இந்த முடிவு சிறப்பானதாக அமையவில்லை அஸ்வின் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இது குறித்து முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் உள்ளது பதான் கூறும்போது “அஸ்வின் ஓபனிங் பேட்டிங்கைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் தேவ்தத் படிக்கலை அணியில் கொண்டிருந்தனர், அவர் கர்நாடகாவுக்காக ஓப்பனிங் செய்தார், மேலும் கடந்த காலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் இதைச் செய்துள்ளார்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது “படிக்கல் ஓபன் செய்வார் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் அவர்கள் அஷ்வினுடன் சென்றார்கள். பல வருடங்களாக அவர் புதிய பந்தில் விளையாடி வருவதால் படிக்கல் இன்னிங்ஸைத் ஓபன் செய்திருந்தால் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கலாம். எண்களுடன் ஒப்பிடும்போது ஒரு தொடக்க ஆட்டக்காரராக அவரது எண்ணிக்கை மிகவும் சிறப்பாக உள்ளது” என்று கூறினார்.
ராஜஸ்தான் அணியின் பேட்டிங் திட்டம் குறித்து பதான் கூறும்போது “பந்து சற்று பழையதாகிவிட்டால் 10 ஓவர்களுக்குப் பிறகு அஷ்வினைப் பயன்படுத்தியிருக்கலாம். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சில ஷாட்களை விளையாடக்கூடியவர். அந்த பதவிக்கு அவர் மிகவும் பொருத்தமானவராக இருந்திருப்பார். புதிய பந்தை எதிர்கொள்வது எளிதானது அல்ல, மேலும் சில அனுபவமுள்ள ஒரு தொடக்க ஆட்டக்காரரை வைத்திருப்பது எப்போதும் சிறந்தது” என்று கூறினார்.