நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியை தழுவியது. இதனை அடுத்து டெல்லி அணி தான் விளையாடிய 5 போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததன் காரணமே அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
டெல்லி சிறந்த பேட்டிங் வரிசையை கொண்டு இருந்தாலும், அணியின் ரெகுலர் கேப்டன் ரிஷப் பந்த் இல்லாதது அவர்களுக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. டெல்லி அணி பேட்ஸ்மேன்களால் ஒரு சேர சிறந்த பங்களிப்பை வழங்க முடியவில்லை.அவர்களின் பேட்டிங் வரிசையில் மாற்றம் மற்றும் புதிய வீரர்களை தேர்ந்தெடுத்தாலும் அது அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை . குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் இளம் இந்திய வீரர் ப்ரித்வி ஷா இதுவரை பேட்டிங்கில் 15, 0, 7 மற்றும் 12 எனப் பதிவு செய்து ஏமாற்றம் அளித்து வருகிறார். நேற்றைய போட்டியில் டக் அவுட் ரன் அவுட் ஆகி வெளியேறினார்
இவரின் பேட்டிங் பர்ஃபார்மன்ஸ் குறித்து அணியின் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சன் கூறும்போது “பிரித்வி இந்தியாவில் உள்ள மற்ற பேட்டரைப் போலவே திறமையானவர். மேலும் அவர் தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதில் இருந்தே அதை அனைவரும் பார்த்திருக்கிறார்கள். தவறு செய்ய பயப்படாமல் திறமைகளை அணுக அனுமதிப்பதே அவருக்கு மிகப்பெரிய விஷயம்.அவரால் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்க முடியும், மற்றும் எல்லா நிலைகளிலும் சிறப்பாக விளையாட முடியும். பிரித்வி போன்ற ஒரு வீரர் மரத்தில் இருந்து விழுந்து விட்டால் அவர் எழுந்திருக்க மாட்டார் என்று அர்த்தம் இல்லை ” என்று கூறினார்.
நேற்றைய போட்டியின் சேஸிங்கின் போது இம்பாக்ட் பிளேயராக வந்த பிரித்வி , அவர் சந்தித்த முதல் ஓவரின் நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்று அந்தப் பந்தை, ஒரு ரன்களுக்கு ஆசைப்பட்டு கவர் திசையில் அடித்து விட்டு ஓடும்போது கவரில் இருந்த அனுஜ் ராவத் தனது வலது பக்கம் டைவ் செய்து பந்தை தடுத்து நிறுத்தினார், விரைவாக எழுந்து நான்-ஸ்ட்ரைக்கர் பக்கத்தை குறிவைத்தார். அவரின் துல்லியமான த்ரோ ஸ்டம்ப்ஸ்களை தகர்க்க நேற்று டக் அவுட்,ரன் அவுட் ஆகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.