ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சூர்யகுமார் யாதவ், சமீபகாலமாக மிகவும் சொதப்பி வருகிறார். அவருடைய ஆட்டம் முன்பு விளையாடியது போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இதனால் அவர் மற்றும் அவரது அணி நிர்வாகம் அவரது ரசிகர்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள்.
நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அவரது வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளை தந்தது. இதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஐபிஎல்-ல் நுழைந்தார். இந்த ஐபிஎல்லிலும் இதுவரை விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை.
இதுவரை நடந்து இரண்டு ஐபிஎல் போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸின் சூர்யாகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். பெங்களூரு மற்றும் சென்னைக்கு எதிரான போட்டிகளில் முறையே 15(16) மற்றும் 1(2) ரன்களை மட்டுமே தன் கணக்கில் சேர்த்தார். இதனால் இன்று நடைபெற உள்ள போட்டியில் சூரியகுமார் யாதவின் மீது அதிக எதிர்பார்ப்புகள் காணப்படுகிறது.
இதற்கிடையில் சூரியகுமார் யாதவின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சூர்யகுமார் யாதவை, தனது ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே பொறுமையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
சூரியகுமார் யாதவ் பற்றி ரவி சாஸ்திரி கூறும்போது “டி20 கிரிக்கெட்டாக இருந்தாலும், ஆரம்பத்தில் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், உங்களின் பெரிய அளவிலான ஸ்ட்ரோக்குகளுக்கு பெயர் பெற்று ஒரு நல்ல வெற்றி மற்றும் நீங்கள் உங்கள் வழியில் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவை ஒரு நல்ல ஷாட் , மற்றும் சிறிது நேரம் கிரீஸில் நிற்பது . ஒருவேளை ஆறு பந்துகள் அல்லது எட்டு பந்துகள், உங்களுக்கு போதும் என்று நினைக்கிறேன் ” என்று கூறினார்
இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர், சூர்யகுமார் யாதவ் விரைவில் தனது ஃபார்மை மீண்டும் பெற வேண்டும் என்று ஆதரித்தார்.
அவர் கூறும் போது “சூர்யா மிகவும் திறமையான கிரிக்கெட் வீரர், உலகின் தலைசிறந்த டி20 வீரர்களில் ஒருவர், இல்லையென்றாலும் சிறந்தவர். தாமதமாக ரன் குவிக்கவில்லை, ஆனால் அவர் ஒரு அற்புதமான வீரர். அவர் எதிர்காலத்தில் நமக்கு சிறந்த வீரராக வருவார் என்று நம்புகிறேன். நான் அவருக்கு அதிக அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. நாங்கள் அவரை ஆதரிப்போம், அவரது சொந்த விளையாட்டில் இருந்து அவர் மனதைக் கவர சில புதிய சவால்களை அமைக்க முயற்சிப்போம், அதுவே அவருக்கு நடுவில் சில நல்ல ஃபார்மைப் பெறுவதற்கு உதவும் “என்று பவுச்சர் கூறினார்.