கிரிக்கெட் செய்திகள்

நான் நான்காவது வரிசையில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன் – காயத்திற்கு பின்பும் வாய்ப்பு கேட்ட சூர்யகுமார் யாதவ்!

Sky

இந்த ஐபிஎல் சீசனில் முதல் இரு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்து நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

அந்த அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை ஆட்டத்தின் கடைசி பந்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 173 ரன்களை வெற்றி பெற துரத்திய மும்பை அணி 16வது ஓவரில் 139/1 என்று நல்ல நிலையில் இருந்தது அப்பொழுது திலக் வர்மா (41), சூர்யகுமார் யாதவ் (0), ரோஹித் ஷர்மா (65) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, ஆட்டத்தில் கடைசி கட்ட பரபரப்பு ஏற்பட்டது. கடைசி பந்தில் வெற்றி பெற இரண்டு ரன்கள் இருந்த நிலையில், டிம் டேவிட் அணி வெற்றிக்கு தேவையான அந்த இரண்டு எண்களை எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் டெல்லி அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது , ​​பீல்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் கண்ணுக்கு மேல் அடிபட்டதால், அனைவரும் சிறிது நேரம் வருத்தத்திற்கு உண்டானார்கள். உடனே அவர் களத்தில் இருந்து வெளியேறி அடிபட்ட இடத்தில் சிகிச்சைகள் மேற்கொண்டு பேட்டிங் வரிசையில் நான்காவதாக வந்து களம் இறங்கினார்.

இது குறித்து அணியின் பயிற்சியாளர் பவுச்சர் கூறும்போது ” அவருக்கு பீல்டிங் செய்து கொண்டிருக்கும் போது களத்தில் அடிபட்டது , அவர் களத்தை விட்டு வெளியேறி ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு உள்ளே வந்தார், அவரது கண் வீங்கத் தொடங்கியது. அவர் ஐஸ் கொண்டு ஒத்தனம் வைத்துக் கொண்டிருந்தார். நான் யோசித்துக்கொண்டு உள்ளே வந்தேன், ஒருவேளை நாம் அவரை வரிசையில் கீழே இறக்கி விடலாம் ” என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது “
சூரியகுமார் யாதவ் என்னை குளியலறையில் சந்தித்து, ‘பயிற்சியாளர், உண்மையில் நான் 4-ல் பேட் செய்ய விரும்புகிறேன்’ என்று கூறுகிறார். என்னைப் பொறுத்தவரை, அது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில் சரியான ஃபார்மில் இல்லாத போதும் கூட அவர் என்னிடம் வந்து கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது.டிரஸ்ஸிங் ரூமில் நீங்கள் விரும்பும் கதாபாத்திரங்கள் இவை. உங்களின் நேரம் கடினமாக இருக்கும்போது, அதை மாற்றுவதற்கு, ​​​​அவர்கள் பயப்பட மாட்டார்கள். அவ்வாறு அவர்கள் கேட்பதன் மூலம் அவர்கள் எந்த இடத்தில் விளையாட விரும்புகிறார்கள்,என்பதை அறிய முடியும். எங்களுக்கு அது மிகவும் , நன்றாக முடிந்தது” என்று கூறினார்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top