கிரிக்கெட் செய்திகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை ; விராட் கோலி அஸ்வின் அக்சர் படேல் முன்னேற்றம்!

ICT

2023 பார்டர் கவாஸ்கர் டிராபி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்தியாவில் வைத்து நடைபெற்று முடிந்திருக்கிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.

இந்தத் தொடரில் இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, ஜூலை ஏழாம் தேதி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தகுதியையும் பெற்றது!

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா இந்திய அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி சமனில் முடிய, அதே சமயத்தில் நடைபெற்ற நியூசிலாந்து இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோற்க, இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியுடன் மோத உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது!

நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முடிவில் இந்திய வீரர்கள் சிறப்பான ஐசிசி தரநிலைகளைப் பெற்றுள்ளார்கள்.

இந்திய அணியின் ரோஹித் சர்மா டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். இந்திய பேட்ஸ்மேன்களில் அதிகபட்ச தரவரிசையாக ரிஷப் பன்ட் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார்.

ஒரு காலத்தில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்தில் நீடித்த விராட் கோலி நான்காவது டெஸ்டில் 186 ரன்கள் குவித்ததின் மூலம் தற்பொழுது 13 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். யாரும் எதிர்பார்க்காத நிலையில், மூன்று அரை சதங்களை விளாசிய அக்சர் படேல் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரநிலையில் 44வது இடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார். இந்த டெஸ்ட் தொடரில் இவருடன் சேர்ந்து தொடர் நாயகன் விருதை வென்ற ரவீந்திர ஜடேஜா ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரநிலையில் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

1200 நாட்களுக்கு மேல் கழித்து விராட் கோலி இடமிருந்து டெஸ்ட் போட்டியில் வந்திருக்கும் சதம் இந்திய அணிக்கு நல்ல விஷயம். மேற்கொண்டு அவரது டெஸ்ட் பேட்டிங் ஃபார்ம் நீடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இது நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெல்ல ஒரு நல்ல வாய்ப்பு!

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top