தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. தர்மசாலாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களான டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமலும் வில் யங் 17 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனைத் தொடர்ந்து ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரில் மிட்ச்சல் இருவரும் இரண்டாவது விக்கெட் இருக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து 159 ரன்கள் பார்ட்னர்சிப்பாக எடுத்தனர். உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும்.
சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரவிந்த்ரா 75 ரன்களில் ஆட்டம் இழக்க இவரைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் லேதம் 5 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு முனையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த டேரில் மிட்ச்சல் ஒரு நாள் போட்டிகளில் தனது ஐந்தாவது சதத்தையும் உலகக்கோப்பை தொடரில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார். நியூசிலாந்து அணி இறுதியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் கடைசி பத்துபவர்களில் அவர்களால் 54 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சிறப்பாக ஆடிய டேரில் மிட்ச்சல் 127 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகளுடன் 130 ரன்களில் இறுதி ஓவரில் ஆட்டம் இழந்தார். நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் இரண்டாவது முறையாக உலக கோப்பையில் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். மேலும் உலகக்கோப்பை போட்டியில் இரண்டு முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய ஒரே இந்திய வீரரும் இவர் தான். மேலும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். வணக்கம் போல் அதிரடியாகவே ஆடிய ரோகித் சர்மா 40 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து கில் 26 ரன்னிலும் ஸ்ரேயாஸ் ஐயர் 33 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் தனது மூன்றாவது அரை சதத்தை பதிவு செய்தார்.
அவருடன் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேஎல் ராகுல் 27 ரன்களில் ஆட்டம் இழக்க சூரியகுமார் யாதவ் துரதிஷ்டவசமாக 2 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 191 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்தது. அப்போது விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்தார் ரவீந்திர ஜடேஜா. இந்த ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இந்திய அணியின் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டபோது விராட் கோலி 95 ரன்கள் களத்தில் இருந்தார். அவர் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்வதோடு தனது 49 ஆவது சதத்தையும் நிறைவு செய்ய முயற்சித்த போது ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய விராட் கோலி 14 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் அவர் சச்சினின் ஒரு நாள் போட்டி சாதனையான 49 சதங்களை சமன் செய்வது மிஸ் ஆனது.
இந்திய அணியின் வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவைப்பட்டபோது ரவீந்திர ஜடேஜா பவுண்டரி அடித்து போட்டியை நிறைவு செய்தார். இதனால் இந்திய அணி 48 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் ஆல் 20 வருடங்களுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை உலகக் கோப்பையில் தோற்கடித்திருக்கிறது இந்திய அணி. கடைசியாக 2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் வைத்து நடைபெற்ற உலக கோப்பையில் இந்தியா நியூசிலாந்து வென்று இருந்தது.மேலும் இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளைப் பெற்று பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு சென்று இருக்கிறது. மேலும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் கில் 38 இன்னிங்ஸ்களில் 2000 ரகளை எட்டி குறைவான எண்ண்ஸ்களில் 2000 ரகளை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன்பு இந்த சாதனை தென்னாபிரிக்க அணியின் ஹாஷிம் அம்லா வசம் இருந்தது. அவர் 40 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை எட்டி இருந்தார்