நேற்று இரவு சென்னையில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கடைசி ஓவர் களம் இறங்கி தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து மூன்றாவது பந்தில் ஆட்டம் இழந்தார்.தனது மூன்று பந்துகளில் 12 ரன்களை விளாசியபோது 5000 ரன்களைக் கடந்தார். இறுதியில் அவர் அடித்த இரண்டு சிக்ஸர்கள். இந்த இரு சிக்ஸர்களும் ஆட்டத்தில் குறிப்பிட்டுத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது ,சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்று போட்டியில் தங்கள் கணக்கைத் தொடங்கியுள்ளது !
ஐபிஎல் வரலாற்றின் தொடக்கத்திலிருந்து சென்னை அணிக்கு கேப்டனாக விளையாடி வரும் எம்.எஸ் தோனி நேற்றைய போட்டியின் இரண்டாவது சிக்ஸரின் மூலம் ஐபிஎல் தொடரில் 5000 எண்களை கடந்த ஏழாவது வீரர் மற்றும் சென்னை அணி இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா 5000 நண்பர்களை கடந்திருந்தார். இந்த வரிசையை பார்க்கையில் 5000 ரண்களுக்கு கடந்த ஆறு பேரும் ஓபனர்கள் மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள், இந்த லிஸ்டில் ஏழாவதாக இணைந்திருக்கும் எம்.எஸ் தோனி மட்டுமே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார்.
இவர் 5000 ரன்கள் கடந்த குறித்து முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் கூறும்போது “தோனியிடம் கேட்டால் என்ன வித்தியாசம் என்று கேட்பார், அவர் 5000, 3000, 4000 ரன்கள் எடுத்தாரா ?, அவர் செய்த சாதனையை விட கோப்பையை வெல்வதுதான் அவருக்கு முக்கியம். அவர் சாதனைக்காக விளையாடுபவர் அல்ல என்று உலகம் அறிந்ததே. நானும் அப்படித்தான் இருந்தேன், எத்தனை ரன் அடித்திருக்கிறார்கள் என்று யாருக்குத் தெரியும் ஆனால் இந்த எண்கள் பின்னர் நினைவுக்கு வருவது உண்மைதான். நீங்கள் ஓய்வுபெறும் போது இந்த வீரர் ஐபிஎல்லில் இவ்வளவு ரன்கள் எடுத்தது நினைவுக்கு வரும்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது
“டாப்-ஆர்டர் பேட்டர்கள் அதிக ரன்களை எடுப்பார்கள் என்பது எதிர்பார்ப்பு. எம்எஸ் தோனி மிடில் ஆர்டரில் அல்லது லோயர் மிடில் ஆர்டரில் வருகிறார், அவர் 5000 ரன்களை எடுத்துள்ளார். அந்த வரிசையில் விளையாடும் போது எந்த வீரராலும் இவ்வளவு ரன்களை எடுக்க முடியாது. அவர் சீரானவர், ரன்களை குவித்து தனது அணிக்காக போட்டிகளில் வெற்றி பெறுகிறார். அவர் மிகப் பெரிய வீரர்” என்று கூறினார்.