கிரிக்கெட் செய்திகள்

தயவுசெய்து சூரிய குமாரோடு சஞ்சு சாம்ஸனை கம்பேர் பண்ணாதிங்க – கபில்தேவ் பரபரப்பு பேச்சு!

Kapil Dev

நடந்துமுடிந்ந ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் கோல்டன் டக் அவுட் ஆகி , ஏமாற்றம் அளித்தார் சூர்யகுமார் யாதவ் . இதனை தொடர்ந்து ரசிகர்கள் இவரை சமூக ஊடகங்களில் வசைப்பாட தொடங்கிவிட்டார்கள் .

ஒருநாள் போட்டிக்கான அணியில் சூர்யகுமார் யாதவின் இடம் குறித்து பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர் குறுகிய வடிவத்தில் அசாதாரணமாக செய்திருந்தாலும், அவர் 50-ஓவர் ஆட்டத்தில் அந்த வகையான ஆட்டத்தை சிறிதளவு கூட வெளிப்படுத்த முடியவில்லை.

மேலும் ஒரு சிலர் மேலே ஒரு படி சென்று சூர்யகுமார் யாதவ்க்குப் பதிலாக சஞ்சு சாம்சனைச் சேர்க்கவேண்டும் என்று கூறிவருகிறார்கள் .இந்த கருத்து பற்றி முன்னாள் இந்திய கேப்டனும் உலகக்கோப்பையை வென்றவருமான கபில்தேவ், ஒருநாள் போட்டி ஆடும் லெவன் அணியில் சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை விரும்புபவர்களின் எண்ண ஓட்டங்களை மறுத்துள்ளார்.

ஒரு சிறந்த பேட்டர் தொடர்ந்து , மூன்று போட்டிகளில் கோல்டன் டக்கில் அவுட்டான ஒரு அரிய சாதனைக்குப் பிறகு தவறான காரணங்களுக்காக வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பொறித்தார், என்று கபில்தேவ் இந்த கருத்தை ஏற்க மறுத்துவிட்டார்.

இது குறித்து கபில்தேவ் கூறுகையில் “இவ்வளவு சிறப்பாக விளையாடிய ஒரு கிரிக்கெட் வீரருக்கு எப்போதுமே அதிக வாய்ப்புகள் வழங்கப்படும். சூர்யகுமார் யாதவை சஞ்சு சாம்சனுடன் ஒப்பிடாதீர்கள், அது சரியாகத் தெரியவில்லை ” என்று கூறினார் .

மேலும் அவர் கூறிகையில் “சூர்யகுமார் யாதவை ஆதரிக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தால், அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஆம், மக்கள் பேசுவார்கள், கருத்து தெரிவிப்பார்கள், ஆனால் இறுதியில் அது நிர்வாகத்தின் முடிவு” என்று கூறினார்

சூர்யகுமார் யாதவை 7ஆம் இடத்தில் அனுப்பியது குறித்து பேசும்போது “போட்டி முடிந்ததும் பேசுவது மிகவும் எளிதானது. சூர்யகுமாரை நம்பர் 7-ல் அனுப்பியதன் பின்னணியில் அவருக்கு ஒரு ஃபினிஷராக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம். இது (பேட்டிங் ஆர்டரை மாற்றுவது) ஒருநாள் போட்டிகளில் ஒன்றும் புதிதல்ல.இதற்கு முன்பும் இது பலமுறை நடந்துள்ளது. ஆம், சில சமயங்களில் ஒரு பேட்டரை கீழே இறக்கினால் அது அவரது தன்னம்பிக்கையை சிதைந்துவிடும். ஆனால், அந்த வீரர் , என்னால் டாப் ஆர்டரில் என்னைக் கையாள முடியும்’ என்று கேப்டனிடம் சொல்ல வேண்டும் .பயிற்சியாளரும் கேப்டனும் குறிப்பிட்ட சிந்தனையுடன் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்த கருத்தின் மூலம் சூர்யகுமார் யாதவ் அணியில் தொடர்ந்து பயணிக்க வாய்பளித்துவரும் இந்தியா நிர்வாகத்தை கபில்தேவ் ஆதரிக்கிறார் என்று நம்மால் அறியமுடிகிறது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top