முன்னாள் மேற்கிந்தியத் தீவுகளின் புகழ்பெற்றவரும் , இருமுறை டி20 உலகக்கோப்பை வென்றவருமான கிறிஸ் கெய்ல் ஐபிஎல்லில் பெங்களூர் அணியுடனான தனது சிறந்த நாட்களை நினைவு கூர்ந்தார்.
அவரின் அதிபட்ச தனிநபர் ஸ்கோரான 175 ரன்கள் , இன்றும் யாராலும் முறியடிக்கப்படாத சாதனையாக இருக்கிறது . இவர் சிக்ஸர் அடிப்பதில் பெயர் போனவர் என்பது நாம் அறிந்ததே !
மேலும் அவர் இயல்பாகவே நடனம் மற்றும் பார்டிகளில் அதிகம் ஈடுபட கூடியவர் , அதே சமயம் சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. அவர் ஆர்.சி.பி.அணியின் தவிர்க்க முடியாத வீரராக வளம் வந்தார். அவர் ஆர்.சி.பில் விளையாடிய நாட்கள் மிகவும் வேடிக்கையாக இருந்ததாகக் கூறியுள்ளார் .
பொதுவாக கிறிஸ் கெயில் நின்ற இடத்தில் இருந்தே ஷாட்டுகள் அடிப்பதற்கு பெயர்போனாவர். ஒன்று, இரண்டிற்கு அதிகம் ஆசைப்படமாட்டார் . இதனால் கெயிலால் ரன்கள் வேகமாக ஓடி எடுக்க முடியாது என்ற கருத்தும் அவர் மீது வைக்கப்பட்டது .குறிப்பாக நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியுடன் பேட்டிங் செய்யும் போது இவர் ஒன்று , இரண்டு ரன்கள் ஓடி எடுக்க கஷ்டப்பட்டார் என்ற கருத்திற்கு பதில் அளித்துள்ளார்.
இது பற்றி கிறிஸ் கெய்ல் கூறியது “நாங்கள் ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் கொண்டிருந்தோம். நாங்கள் ஒருவருக்கொருவர் நன்றாக ரன்களை பூர்த்தி செய்தோம். சில சமயங்களில் ‘கிறிஸ் கெயில் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடவில்லை’ என்று சொல்லலாம். நான் விராட் உடன் பேட் செய்கிறேன், நான் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடினேன், எனவே விக்கெட்டுகளுக்கு இடையில் நாங்கள் ஓட மாட்டோம் என்று கூறுவதை நான் விரும்பவில்லை” என்று கூறினார் .
மேலும் அவர் கூறுகையில் ” எங்களிடம் ஒன்பது (பத்து) 100-ரன் பார்ட்னர்ஷிப்கள் உள்ளன, நாங்கள் எத்தனை இரண்டு மற்றும் மூன்று ரன்கள் எடுத்தோம் என்பதைச் சரிபார்க்கவும். விக்கெட்டுகளுக்கு இடையில் நான்தான் வேகமாக இருந்தேன். இதனால் தான் நாங்கள் அதிக முறை 100-ரன் பார்ட்னர்ஷிப் போடமுடிந்தது. ரன் ஓடவில்லை என்றால் இது எப்படி சாத்தியம் ஆகும்,நாங்கள் ரன்கள் ஓடி எடுத்ததற்கு சாட்சி இந்த பார்ட்னர்ஷிப்கள் ” என்று கூறினார் .
விராட் கோலி குறித்து கெயில் கூறியது ” விராட் கோலி மற்றும் மற்ற வீரர்களுடன் ஒரு டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்டால், நான் அங்கு சென்றவுடன், நான் எப்பொழுதும் ஜாலியாக இருப்பேன், மிகவும் வேடிக்கையாக, நடனமாடுவேன். நான் அவர்களுக்கு சில திட்டங்களை கூறுவேன் , மேலும் விராட்டின் திறமைகள் இருப்பதை உணர்ந்தேன். அவரால் அதை வெளிக்காட்ட முடியும் என்று தெரியும் ” என்று கூறினார் .