சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சனிக்கிழமை வான்கடே ஸ்டேடியத்தில் பரம எதிரியான மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஒரு சிறப்பு வாய்ந்த வெற்றியைப் பெற்றது, தற்போது நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் 2023 சீசனில் சென்னை அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது.ஆனால் எம்எஸ் தோனி தலைமையிலான அணிக்கு முக்கிய இரண்டு வீரர்களின் காயங்கள் அணிக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.
நேற்றைய போட்டிக்கு முன் , இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் அடைந்தார், அதே நேரத்தில் மும்பைக்கு எதிரான போட்டியின் முதல் ஓவரின் போது சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தொடை தசையில் ஏற்பட காயம் காரணமாக வெளியேறினார். இதனால் சென்னை அணி நேற்றை போட்டியில் இரு மாற்றங்களை செய்ததது.
மும்பைக்கு எதிரான போட்டியில் ஸ்டோக்ஸ் சிறிய விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சனிக்கிழமை விளையாடாவில்லை என்று சென்னை நிர்வாகம் அறிவித்துள்ளது.இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடினார், அங்கு அவர் 15 ரன்கள் எடுத்தார் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முழங்கால் காயம் பற்றிய கவலைகளுக்கு மத்தியில் ஒரு ஓவரையும் வீசினார்.
மறுபுறம், சாஹர், நேற்றைய போட்டியின் முதல் ஓவரில் ஐந்தாவது பந்து வீசிய பிறகு அவரது தொடை தசையில் காயம் ஏற்பட்டது. டீம் பிசியோவின் உதவிக்குப் பிறகு அவர் ஓவரை முடித்தார், ஆனால் அதன் பிறகு மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இவரின் காயம் குறித்து அணி நிர்வாகம் கூறும் போது “அணி, சென்னைக்கு திரும்பியதும் காயத்தின் அளவை அடையாளம் காண சாஹர் ஸ்கேன் செய்யப்படுவார். சென்னை சூப்பர் கிங்ஸ் மருத்துவ ஊழியர்கள் இரு வீரர்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர், மேலும் அவர்கள் குணமடைய தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவார்கள்” என்று அறிக்கை கூறுகிறது
கடந்த ஒரு வருடத்தில் சாஹர் தொடை தசையில் காயம் அடைந்திருப்பது இது மூன்றாவது முறையாகும். பிப்ரவரி 2022 இல் குணமடைய, தொடர்ந்து , அவர் முதுகில் காயம் அடைந்தார், இதனால் அவர் முழு ஐபிஎல் சீசனையும் தவறவிட்டார் மற்றும் ஆறு மாதங்கள் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.ஐபிஎல் 2023 இல் மட்டுமே களத்திற்கு திரும்பினார் என்பது குறிப்பிடதக்கது.