ஐபிஎல்

முன்னாள் சென்னை அணி வீரரை ஒப்பந்தம் செய்த பெங்களூர் அணி – கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவாரா ?

Jadhav

நடைபெற்று வரும் ஐபிஎல் 16வது சீசன் தற்பொழுது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணிகளும்  அடுத்த கட்ட சுற்றுக்கு எவ்வாறு முன்னேறுவது என்று திட்டங்களை வகுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் பெங்களூர் அணி வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான டேவிட் வில்லிக்கு பதில் முன்னாள் இந்திய வீரரை ஒப்பந்தம் செய்துள்ளது.

 இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் லக்னோ மைதானத்தில் விளையாட உள்ளார்கள். இந்தப் போட்டி இரு அணிகளுக்கு முக்கியமான போட்டி என்பதால் இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். போட்டி நடைபெறும் லக்னோ மைதானம் சுழல் பந்துவீச்சு என்பதால் இந்த போட்டியில் சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர் அணியை எடுத்துக் கொண்டால் இந்த முறை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரு துறைகளும் மிகவும் மோசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.பெங்களூர் அணியில் டு பிளசி,விராட் கோலி மற்றும் மேக்ஸ்வெல்லை தவிர  வேறு யாரும் பேட்டிங்கில் இதுவரை சோபிக்கவில்லை.

இதனால் வெற்றி பெற வேண்டிய போட்டிகளும் அவருக்கு தோல்வியாகவே அமைந்தன. இதனால் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் அவர்களால் நிலைக்க முடியவில்லை. இதை சரிகட்டும் வகையில் பெங்களூர் அணி தற்பொழுது முன்னாள் இந்திய ஆல்ரவுண்டரும் முன்னாள் சென்னை அணியின் ஆல் ரவுண்டுருமான கேதர் ஜாதவ்  அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

கேதர் ஜாதவிற்கு சென்னை அணியில் ஒரு சீசன் சரியாக போகாததால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார், மற்றும் ரசிகர்களால் அதிகம் சோதிக்கப்பட்டார். இருந்தும் தன்னுடைய திறமையை சமீபத்தில் நடைபெற்ற முடிந்த ரஞ்சிப் போட்டியில் வெளிப்படுத்தி இருந்தார். இதனால் நடந்து முடிந்த இடத்தில் தனது பெயரை பதிவு செய்த கேதர் ஜாதவை, எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

 தற்பொழுது பெங்களூர் அணியின் மிடில் ஆர்டரை சரி செய்வதற்காக வேகவந்துவீச்சு ஆல்ரவுண்டரான டேவிட் வில்லிக்கு பதிலாக கேதர் ஜாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் அணியில் இணைவதன் மூலம் பெங்களூரு அணியின் மிடில் ஆர்டர் பலம்பெறும் என நம்பப்படுகிறது.

 இதற்கு முன் 17 போட்டியில் பெங்களூரு அணிக்காக கேதர் ஜாதவ் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top