கிரிக்கெட் செய்திகள்

அதிரடி வீரர் ஃபார்முக்கு வந்தால் அணி மேலும் பலமாகும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Kkr

ஐபிஎல் 16 வது சீசனில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாட உள்ளன. கொல்கத்தா அணி கடைசி போட்டியில் பலம் வாய்ந்த குஜராத் அணியை கடைசி பந்தில் சிக்சர் அடித்து வீழ்த்திய நம்பிக்கையில் இந்த போட்டியில் களமிறங்குகிறது.
ஹைதராபாத் அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் இந்த போட்டியை கொல்கத்தாவை எதிர்த்து விளையாட கொல்கத்தா வந்துள்ளது.

ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் இணைந்ததன் மூலம் அணி ஓரளவுக்கு வலுவாக காணப்படுகிறது. அணியின் பேட்டிங் வரிசை அபிஷேக் ஷர்மா,ராகுல் திரிப்பாதி,கேப்டன் மார்க்ரம் என இருந்தாலும், பல கோடிகள் கொடுத்து எடுக்கப்பட்ட புரூக் இன்னும் தனது முழுமையான பேட்டிங் திறமையை காட்டாதது அணிக்கு வருத்தம் ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். அணியின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது.

கொல்கத்தா அணியை பொறுத்த வரையில் கடந்த சில வருடங்களாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டராகிய ரசல் மற்றும் சுனில் நரைன் ஐ நம்பி விளையாடி வந்தது. ரசலால் முன்பு போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் கொல்கத்தா அணி இந்த முறை பாதிக்கப்படுமா என்ற கேள்வி நிலவியது. ஆனால் இந்த சீசனில் வெற்றி பெற்ற இரண்டு ஆட்டங்களிலும் தனி தனி சூப்பர் ஸ்டார் உருவானதால் அணியில் அந்த கேள்வி ஓரளவுக்கு மறைந்துள்ளது

ரஸ்ஸலின் ஃபார்ம் குறித்து கு முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும்போது “
கொல்கத்தா ஒரு அணியாக இருக்கிறது. அணியில் ஏதோ குறைகள் இருப்பது போல தெரிந்தாலும் ஒரு சிறந்த அணியாகத் தெரிகிறது. ரஸ்ஸலின் பேட் இதுவரை பேசவே இல்லை. பேட்டிங்கில் ஏதோ குறை இருப்பது போல் தெரிகிறது ஆனால் ரிங்கு சிங் ஒரு நாள் வருகிறார், வெங்கடேஷ் ஐயர் மற்றொரு நாள் வருகிறார். இப்போது நிதிஷ் ராணாவும் ரன்கள் எடுத்துள்ளார் ” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது “ரஹ்மானுல்லா குர்பாஸும் ஒரு நாள் ரன் அடித்தார். இதனால் கொல்கத்தா இன்னைக்கு தினந்தோறும் ஒரு சூப்பர் ஸ்டார் உருவாகி கொண்டிருப்பதால் அந்த அணிக்கு கவலைகள் இல்லை.ஆனால் ரசல் ரன்கள் எடுத்தால், அணியின் அந்தஸ்து திடீரென்று மேலும் உயரும்” என்று கூறினார்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top