கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் விளையாடும் போட்டி மும்பை வான்கடே
மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் கொல்கத்தாவை பேட்டிங் செய்ய பணித்தது. இந்த முறை மும்பை இந்தியன் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்படுகிறார். மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுக வீரராக களம் இறக்கப்பட்டார்.
கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் குர்பாஜ் மற்றும் ஜெகதீசன் களம் இறங்கினார்கள். இருவர்களும் வந்த வேகத்தில் டக் அவுட்டிற்கு திரும்ப இந்த முறை ஒன் டவுனில் வெங்கடேஷ் ஐயர் களம் இறக்கப்பட்டார். வந்த வேகத்தில் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் பந்துகளையும் நாளாபுறமும் சிதற அடித்தார்.
வேகப்பந்துவீச்சாளர்களை அவர் கையாண்ட விகிதம் மிகவும் பாராட்டுக்குரியதாக இருந்தது. சிறப்பாக விளையாடியவர் ஐம்பது ரன்களை மிக விரைவாக எட்டினார். இவர் ஒரு முனையில் அச்சாணி போல் நின்று விளையாட மற்றவர்கள் வருவதும் போதுமாக இருந்தனர் இதனால் அணியின் விகிதம் வேகமாக உயரவில்லை.
தான் சந்தித்த 49 வது வந்தில் தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். இந்த சதத்தின் மூலம் கொல்கத்தா அணியில் பிரண்டன் மெக்கலத்திற்கு பிறகு சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். அடுத்த பந்தில் பவுண்டரி அடித்த வெங்கடேஷ் ஐயர் 104 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்தி மும்பை அணி விளையாடி வருகிறது.
வெங்கடேஷ் ஐயர் மத்திய பிரதேசம் அணிக்காக சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தி இருந்தாலும், காயத்திற்கு பிறகு காயத்திலிருந்து மீண்டு வந்து இன்றைய போட்டியில் சதம் அடித்திருப்பது பாராட்டக்கூடிய செயலாக பார்க்கப்படுகிறது. இவருக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு அளித்து வந்த
கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகத்தையே இந்த பெருமை சாறும்.
ஏனெனில் கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தின் போது அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில்லை விடுவித்து வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா அணி தக்க வைத்தது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாண்டாலும் அவருக்கு காயம் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது.
காயத்திலிருந்து தன்னை எப்படி காத்துக் கொள்வது என வித்தை அறிந்து இருந்தால் மட்டும் போதும் வெங்கடேசருக்கு வரும் காலம் மிகவும் வளமான காலமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை!