ஐபிஎல் 16வது சீனில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூர் எம் ஏ சின்னசாமி மைதானத்தில், பெங்களூர் அணிகள் மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளார்கள். சென்னை அணியின் கேப்டனாக தோனியும்,பெங்களூர் அணிக்கு கேப்டனாக முன்னாள் சென்னை அணியின் எல்லைச்சாமியான பாப் டு பிளசிஸ் உம் மோத உள்ளார்கள்.
ஐபிஎல் போட்டிகளில் ஒரு சில அணிகள் மோதும் போட்டிகளுக்கு அதிக கிராக்கிகள் காணப்படும். எடுத்துக்காட்டாக சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதினால் அந்த போட்டி இந்தியா, பாகிஸ்தான் அளவுக்கு பேசப்படும் அதே அளவு சென்னை மற்றும் பெங்களூர் அணி பெங்களூர் மைதானத்தில் மோதும் போட்டி அதே அளவுக்கு சமமாக பேசப்படும். மேலும் பெங்களூர் மைதானத்தில் கேப்டன் தோனியின் பேட்டிங் சராசரி சிறப்பாக உள்ளது. இதனால் இன்றைய போட்டியிலும் தனது சிறப்பான பங்களிப்பு வழங்குவார் என அனைவரும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் கூறும் போது “சென்னை சூப்பர் கிங்ஸ் கடினமான சூழ்நிலைகளில் இருந்து எப்படி மீள்வது என்பது தெரியும். இது எல்லாம் தோனியின் கேப்டன்சியில்தான் இது சாத்தியமானது. 200 போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பது மிகவும் கடினம். பல போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பது ஒரு சுமை, அது அவரது ஆட்டத்தையும் பாதித்திருக்கலாம். ஆனால் மஹி வேறு. அவர் ஒரு வித்தியாசமான கேப்டன். அவரைப் போன்ற ஒரு கேப்டன் இருந்ததில்லை, எதிர்காலத்தில் அவரைப் போன்ற ஒருவர் இருக்கமாட்டார் ” என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரை பொருத்தவரையில் இதுவரை நடைபெற்ற 16 சீசன்களில் சென்னை அணி நான்கு முறை கோப்பை கைப்பற்றியுள்ளது.மேலும் சென்னை அணி விளையாடிய சீசன்களில் இருமுறை தவிர மற்ற அனைத்து சீசன் களிலும் பிளே ஆப்ஸ் வரை சென்று உள்ள அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகவும். அணியின் கேப்டன் தோனி 41 வயதான அவர் 200 போட்டிகளில் ஐபிஎல் அணியை வழிநடத்திய முதல் வீரர் ஆனார். ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர், தோனி 2008 இல் பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல்லில் கேப்டனாக அறிமுகமானார்.
இந்த ஐபிஎல் தொடரை பொருத்தவரையில் தோனி தலைமையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டியில் இரண்டு வெற்றி மற்றும் இரண்டு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.