இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி, முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது.
அதனை தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில், மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியாவும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வென்றன. கோப்பை யாருக்கு என்று நிர்ணயம் செய்யும் இறுதி போட்டி , தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி , மூன்று மாற்றங்கள் செய்ய பட்டு கிளைன் மேக்ஸ்வெல் , ஜோஸ் இங்கிலீஷ் , கேமரூன் கிரீன் வெளியில் அமர வைக்கப்பட்டார்கள் . அவர்களுக்கு பதிலாக டேவிட் வார்னர் , அலெக்ஸ் கேரி மற்றும் ஆஸ்டன் ஆகர் களம் இறக்கப்பட்டார்கள் . இந்திய அணியில் ஒரு மாற்றமாக , சுழல் பந்து வீச்சாளர் குல்திப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார் .
டேவிட் வார்னர் அணியில் இருந்தும் , வழக்கமான ஓப்பனிங் கூட்டணியான டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும் களமிறங்கினார் . மிட்சல் மார்ஸ் வந்தவுடன் தனது தாக்குதல் பாணியை வெளிப்படுத்த , மற்றொரு முனையில் டிராவிஸ் ஹெட்டோ பந்துகளை ரொட்டேட் செய்து பெரும்பாலான ஸ்டிரைக்குகளை மார்ஸ் க்கு வழங்கிக் கொண்டிருந்தார். இவ்வாறான சூழ்நிலையில் முதல் பத்து ஓவர்களுக்கு இந்தியா அணியின் பந்து வீச்சு சொல்லிகொள்ளும் படி இல்லாததால் , ஆஸ்திரேலியா அணி அதை பயன்படுத்தி விக்கெட் இழப்பின்றி 61 ரண்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா , பந்து வீச துணை கேப்டனான ஹர்திக் பாண்டியாவை அழைத்தார் . அதற்கு கைமேல் பலனாக , அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்தார் .தொடர்ந்து பந்து வீசிய பாண்டியா ஆஸ்திரேலிய அணி தலைவர் ஸ்மித்தை ரண் கணக்கை துவங்குவதற்கு முன்னே வெளியேற்றினார் .இந்த விக்கெட்டின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக முறை ஸ்மித்தை அவுட் ஆகிய வீரர்களில் பாண்டியா இரண்டாவது இடத்தை பிடித்தார் . (ஐந்து முறை ) முதலிடத்தில் ஆடில் ரஷித் உள்ளார் ( 6 முறை )
அச்சுறுத்தலாக விளையாடி வந்த மிட்சல் மார்ஸையும் , கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார் பாண்டியா . முதல் பாதியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தினாலும் , அடுத்தடுத்து அவர்களின் விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணி ஆட்டத்தை கையில் எடுத்ததால் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது . தற்பொழுது மார்னஸ் லபுசேன் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் களத்தில் விளையாடி வருகிறார்கள்.
The MVP of Indian limited over team – Hardik Pandya. pic.twitter.com/J7IxgIEigI
— Johns. (@CricCrazyJohns) March 22, 2023