கிரிக்கெட் செய்திகள்

“சச்சினின் இரண்டு சாதனைகளை முறியடித்த விராட் கோலி” ! நான்காம் நாளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை காண டெஸ்ட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த இரண்டு அணிகளும் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் சதத்தால் 480 ரன்கள் முதல் இன்னிங்ஸில் எடுத்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி விராட் கோலி மற்றும் சுப்மண் கில் ஆகியோரின் சிறப்பான சதத்தால் 571 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியா அணியை விட 91 ரன்கள் முன்னிலை பெற்றது . இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 186 ரன்கள் எடுத்தார்.

நேற்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தின் போது ஐந்து புதிய சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் நான்கு சாதனைகளில் விராட் கோலி இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேதன் லியான்:
இரண்டு பேட்ஸ்மன்களுக்கு எதிராக 500 ரன்கள் விட்டுக் கொடுத்த வீரர் என்ற சாதனையை நேற்று எட்டியிருக்கிறார் ஆஸ்திரேலிய அணி வீரர் நேதன் லியான். இவர் இதற்கு முன் குஜராவிற்கு எதிராக 570 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார். நேற்றைய ஆட்டத்தின் மூலம் விராட் கோலி இவருக்கு எதிராக 511 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் இரு ஆட்டக்காரர்களுக்கு எதிராக அதிக ரன்களை கொடுத்த வீரர் என்ற பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார் லியான்

விராட் கோலி :
நேற்றைய போட்டியின் போது சச்சின் டெண்டுல்கரின் மேலும் ஒரு சாதனையை முறியடித்திருக்கிறார் விராட் கோலி. ஒரு நாட்டில் குறைந்தபட்ச இனிம்ஸ்களில் 11 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இவர் முறியடித்திருக்கிறார். இந்தியாவில் 246 இன்னிங்ஸ் களில் ஆடிய சச்சின் 11 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இந்த சாதனையை 224 இன்னிங்ஸ் மூலம் எட்டி இருக்கிறார் விராட் கோலி.

மேலும் இந்தப் போட்டியில் விராட் கோலி தனது எழுபத்தி ஐந்தாவது சர்வதேச சதத்தை பதிவு செய்தார். இதிலும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இருக்கிறார் அவர். சச்சின் டெண்டுல்கர் 566 இன்னிங்ஸ் களில் தனது 75 வது சதத்தை எட்டினார். ஆனால் விராட் கோலி 552 இன்னிங்ஸ்களில் தனது 75 ஆவது சதத்தை எட்டி சாதனை படைத்திருக்கிறார்.

இந்திய அணியின் சாதனை:
நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தின் போது உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணியின் சாதனைகளை சமன் செய்திருக்கிறது. அதாவது ஒரு இன்னிங்ஸில் முதல் ஆறு விக்கெட்டுகளும் 50+ பார்ட்னர்ஷிப் அமைத்தது தான் அந்த சாதனை. 1960 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்த சாதனையை முதல்முறையாக நிகழ்த்தியது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்த சாதனையை சமன் செய்தது. தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியும் இந்த சாதனையை சமன் செய்திருக்கிறது . 146 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற சாதனை நிகழ்த்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top