குவஹாத்தியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 198 ரன் சேஸிங்கில் ஹெட்மயரை 7-வது இடத்தில் இறக்கிய,ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் பயிற்சியாளர் குமார் சங்கக்கார ஆகியோரை, முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் சாடியுள்ளார்.
18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த மேற்கிந்தியத் தீவுகள் சர்வதேசத்தின் அற்புதமான கேமியோ இருந்தபோதிலும், ஹெட்மயர் ஆட்டமிழந்ததால் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
57/3 என்று ராஜஸ்தான் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அவர்கள் ரன் மற்றும் பந்துகளின் எண்ணிக்கை விகிதத்திற்கு இணையாக இருந்தனர். ஆனால் ஹெட்மையரை அனுப்புவதற்கு பதிலாக, நடுவில் படிக்கலை பேட் செய்ய அனுப்ப, அவரால் பந்துகளை சரியாக பேட்டில் கிளிக் செய்ய குறைவான வாய்ப்பு மட்டுமே இருந்தது.
இதனால் ஹெட்மியர் பேட்டிங் செய்ய வந்த நேரத்தில், தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு 13 ரன்களாக உயர்ந்தது. கடினமாக அடித்த இடது கை வீரர் சில ஷாட்டுகளை அடித்தார், மேலும் இளம் துருவ் ஜூரெலுடன் சேர்ந்து சேஸிங்கில் அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார், ஆனால் சாம் கர்ரன் வீசிய கடைசி ஓவரில் ஹெட்மியர் ரன் அவுட் ஆக, ஐந்து ரன்களில் வெற்றியைப் இழந்தனர்.
இதுகுறித்து சேவாக் கூறும்போது “அவருக்கு பேட்டிங் செய்ய போதுமான பந்துகள் கிடைக்கவில்லை. இந்த 200 ஸ்ட்ரைக் ரேட்டால் என்ன பயன்? அவர் நம்பர் 4 அல்லது 5 இல் பேட்டிங் செய்திருந்தால், ஆட்டத்தின் முடிவு வேறாக இருந்திருக்கும் .ரியான் பராக்கிற்கு முன்பாகவாது அவரை அனுப்பிருக்க வேண்டும்.அப்படி நடந்திருந்தால், அவர் பேட்டிங் செய்ய அதிக பந்துகளைப் பெற்றிருப்பார். அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு நம்பர் 4 இல் பேட் செய்கிறார். அவர் இந்தியாவில் சதம் அடித்துள்ளார், கன்டிசன்களை நன்கு அறிந்தவர். அவர் கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடினார். மேலும் அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்தபோதும், அவர்களை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு” என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது “
அவர் முன்னதாகவே அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அவர் மிகவும் ஆபத்தான பேட்டர். ஆம், அவர் சீக்கிரமே வெளியேறியிருக்கலாம் ஆனால் ஆர்டரைக் குறைத்து பேட்டிங் செய்வதன் மூலம் சீக்கிரம் வெளியேற மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆனால் அவர் முதல் நான்கு இடங்களுக்குள் வந்து செட் ஆகிவிட்டால்? இன்னும் ஒரு ஓவரில் அவர் உங்களுக்காக ஆட்டத்தை வென்றிருக்கலாம். ராஜஸ்தான் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் மற்றும் பயிற்சியாளர் குமார் சங்கக்கார ஆகியோர் இங்கு தவறிழைத்துள்ளனர் என நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.