கிரிக்கெட் செய்திகள்

இன்றைய போட்டியில் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா ? மாட்டாரா ? அப்டேட் !

Stokes
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா,பாகிஸ்தான் மோதும் போட்டி என்றால் ஆட்டம் அனல் பறக்கும்,அதற்கான எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருக்கும். அது போலவே ஐபிஎல் இல் இந்தியா,பாகிஸ்தான் போட்டிக்கு இணையாகவே எதிர்பார்ப்புகளும் விறுவிறுப்புகளும் அதிகமாக இருக்கும் போட்டி என்றால் அது சென்னையும் மும்பையும் விளையாடும் போட்டி தான்.
 
இன்று இரவு அரபிக் கடலின் அருகில் உள்ள  வான்கடேயில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் மோதலில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மும்பை இந்தியன்ஸுடன் கடந்த போட்டியை போல சென்னை அணி மீண்டும்  வெற்றிகளை எதிர்பார்க்கிறது. மும்பை அணியை பொறுத்தவரையில் முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு எதிராக மிகவும் மோசமாக தோற்றதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. சொந்த மைதானத்தில் நடப்பதால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக பேசப்படுகிறது.

 இருப்பினும், இந்த  மோதலுக்கு முன்னதாக, சென்னை அணி நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்த ஆட்டத்தில் விளையாடுவதில் சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது அவருக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மையை பொறுத்து இன்று விளையாடுவாரா மாட்டாரா என்பதை நாம் டாஸ் போடும்போது நம்மால் அறிய முடியும். ஒருவேளை ஸ்டோக்ஸ் விளையாட வில்லை என்றால் அவரது இடத்திற்கு தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா வீரர்களான பிரிட்டோரியஸ்  அல்லது சிசாண்ட மகாலா விளையாட வாய்ப்புள்ளது.

 இதற்கிடையில் ஸ்டோக்ஸ் சென்னை அணியில் இணைந்தது குறித்து இங்கிலாந்து அணி வீரர் மொயின் அலி கூறும்போது "அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். சென்னை அணி என்பது உங்களின் உரிமைக்கான ஒன்றாகும் அணியின் நிர்வாகமும் அவ்வாறு நடந்து கொள்ளும்.மேலும் இந்த உரிமைக்காக விளையாடுவதை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்கள். அவர் நன்றாகவே செட்டில் ஆகிவிட்டார். அவர் தனது அனுபவத்துடன் அணியின் ஒரு பெரிய பகுதியாக இருக்கிறார்" என்று கூறினார்.

 மேலும் அவர் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி குறித்து கூறும்போது "நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டி இது. இவைகள் இரண்டு மிகவும் வெற்றிகரமான உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களைப் பின்தொடர்வது மிகப்பெரியது மற்றும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வெளியே கிரிக்கெட் வீரராக நீங்கள் விளையாடக்கூடிய மிகப்பெரிய விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாகும். கால்பந்தின் பார்வையில் மான்செஸ்டர் யுனைடெட் லிவர்பூல் விளையாடுவதைப் போன்றது,இது மிகப்பெரிய விளையாட்டு போட்டிகள்" என்றுகூறினார்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Most Popular

To Top